சாத்தான்குள சாதனையாளரின் கடைசி பதிவு

மறைந்த மூத்த ஊடகவியலாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்களின் கடைசி முகப்புத்தக பதிவொன்றை நாம் தருகின்றோம்.

1949 தமிழ் புத்தாண்டு தினத்தன்று நான் இலங்கையில் முதன்முதலில் கால் பதித்தேன்.இலங்கையில் கல்வியாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை.இங்கு தமிழில் ஐந்தாம் வகுப்பை முடித்து விட்டுச் சென்ற எனக்குஅங்கு ஆங்கிலம் முதலாம் வகுப்பில் தான் இடம் கிடத்தது.

இரண்டே மாதங்கள் தான் மூன்றாம் வகுப்புக்கு மாற்றப் பட்டேன். அரை வருடப் பரிட்சையில் ஐந்தாம் வகுப்புக்கு உயர்த்தப்பட்டேன்.டிசம்பர் ஆண்டு இறுதித் தேர்வில் இன்னும் ஒரு DOUBLE PROMOTIONஇரட்டை உயர்வை எதிர்பார்த்து காத்திருந்தேன். அப்படியானால்என் வயதுக்கொத்த வகுப்பை எட்டி விடுவேன்.

புகழ்பெற்ற பள்ளிக்கூடமான ஸாஹிராவில் சேரும் என் கனவும் நிறைவேறும்.டிசம்பர் முதலாம் தேதி தந்தை பள்ளிக்கூடம் வந்தார்.’ உடனே வா நாம் ஊருக்குப் போகிறோம்’ என்றார்.படிப்பு,பரிட்சை என்று நான்சொல்லிய எதையும் அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இரவு கோட்டை ரயில் நிலையத்துக்கு எங்கள் ஊர்க்காரர்கள்நிறைய பேர் வந்திருந்தார்கள். திடுதிப்பென்று அமைந்து விட்டஇந்த பயணத்துக்கு வழி அனுப்ப ஏன் இத்தனை பேர் என்றுஎனக்குள் ஓர் இனம் தெரியாத மலைப்பு.பலரும் என்னை நெருக்கமாக அணைத்துக் கொண்டு என் தலையைபரிவுடன் வருடிக் கொடுத்தார்கள். எனக்கு காரணம்புரியவில்லை..

இரவு முழுக்க பயணித்து அதிகாலையில் தலைமன்னார் வந்து, அங்கிருந்து கப்பலில் தனுஷ்கோடி வந்து,. மதிய உணவுக்குப் பின் மதுரைக்கு வண்டி ஏறி, அங்கிருந்து இரவு புறப்பட்ட வண்டியில் அதிகாலை நெல்லையை அடைந்து, ஒரு வாடகைக் கார் பிடித்து பொல பொலவென்று விடியும் தருவாயில் சாத்தான்குளம்.

வண்டி நின்றது தந்தை பாய்ந்து வீட்டுக்குள் சென்றார். நான்சாவதானமாக் பெட்டியை இறக்கிக் கொண்டிருந்தேன். உள்ளேஓவென்று உரத்த குரலில்பலர் அழும் சத்தம்.விவரம் தெரியாமல்ஒவ்வொரு அறையாக என் தாயாரைத் தேடுகிறேன்.காணவில்லை.

முதலாம் தேதி இறந்து ஈமச்சடங்குகளும் முடிந்து விட்டிருந்தனகடைசி வரை என்னிடம் சொல்லாமலே என்னை என் தந்தைஊருக்கு அழைத்து வந்து விட்டார். கடைசி நிமிடத்திலும்கூடஎன்னைக் காண வேண்டும் என்று என் தாயார் துடித்திருக்கிறார்.அதை நினைக்கும் தோறும்,என் சம்பாத்தியத்தில் என் தாய் ஒருகவளம் சோறு கூட உண்ணவில்லையே என்பதை எண்ணும்தோறும் இன்னும் நான் எனக்குள் மௌனமாக அழுகிறேன்.

20208 comments4 sharesLikeShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!