இது டீஸண்ட் ஆன Adult காமெடி Ladies பார்த்து ரெம்ப ரசிக்கிறாங்க

நமது நாட்டில் தலை சிறந்த தொலைக்காட்சி விளம்பர இயக்குநரான இளங்கோ ராம் தென்னிந்தியாவில் கால்பதித்துள்ள திரைப்படம் தான் ”பெருசு”.

தமிழ் சினிமாவில் தனது முதலாவது படத்தில் ஒரு பேசும் விடயமாக மாற்றி இருப்பது தான் பெரும் வியப்பு.

சிங்கள படமான நெலும் குளுனவை தழுவி எடுத்த பெருசு தான் இன்று அணைந்து சினிமா ரசிகர்களாலும் பேசப்படுகிறது.

இயக்குநரான இளங்கோ ராம் ஜெய தொலைக்காட்சிக்கு வழங்கிய சிறப்பு பேட்டி

நடிகர் வைபவ், சுனில் ரெட்டி, நிஹாரிகா, சாந்தினி தமிழரசன், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் அடல்ட் காமெடி குடும்ப படமாக வெளியாகியிருக்கிறது பெருசு.

அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அந்த முயற்சிகள் எந்தளவுக்கு பார்வையாளர்களை திருப்திப்படுத்துகிறதோ அந்த அளவுக்கு வெற்றியும் பெறுகின்றன. வைபவ் தனது அண்ணன் சுனில் உடன் இணைந்து இப்படியொரு கதையை தேர்வு செய்து நடித்ததற்கே பாராட்டுக்களை தெரிவிக்கலாம்.

இலங்கையை சேர்ந்த ஒரு இயக்குநர் தென்னிந்தியாவில் புகழின் உச்சிக்கு செல்வதை நாம் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும்.

இன்னும் பல வெற்றிகளை இளங்கோ ராம் பெற வேண்டும் . அவருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!