நீங்கள் இலங்கை ஊடகவியலாளரா?இந்த FB பக்கம் உங்களுக்கானது

இலங்கையில் அச்சு, இலத்திரனியல், இணையத்தளம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் மொழிபேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு தனித்துவத்துடன் செயற்படக்கூடிய அமைப்பை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக விசேட கூட்டமொன்று இன்று (16022025) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்று அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது, தமிழ் ஊடகவியலாளர்களுக்கான புதிய ஒன்றியத்தின் நிர்வாக தெரிவுகள் இடம்பெற்றன. இதற்கமைய ஒன்றியத்தின் தலைவராக தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் தெரிவு செய்யப்பட்டார்.

ஒன்றியத்தின் செயலாளராக தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜாவும் பொருளாளராக திருமதி வருணி ( ஜூனியர் தமிழன் பத்திரிகை) தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் ஒன்றியத்தின் பிரதி தலைவர்களாக தில்லையம்பலம் தரணீதரன்( சுயாதீன ஊடகவியலாளர்), கலாவர்சினி கனகரட்ணம் ( சுயாதீன ஊடகவியலாளர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி செயலாளர்களாக மஹேஸ்வரி விஜயனந்தன்( சுயாதீன ஊடகவியலாளர்) , நிர்ஷன் இராமானுஜம் ( சுயாதீன ஊடகவியலாளர் ) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் உதவிப் பொருளாளராக பார்த்தீபன் ( சுயாதீன ஊடகவியலாளர்) தெரிவு செய்யப்பட்டதுடன் ஒவ்வொரு பிரதேசங்களுக்குமான பிராந்திய ஒருங்கிணைப்பாளர்களும் இதன்போது தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்தும் கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் கலந்துகொண்ட
நூற்றுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட மற்றும் இளம் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களில் எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகள், தொழில் நிரந்தரம், சம்பளம் மற்றும் பதவி உயர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்தனர்.

அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பிரதிநிதிகள் 28/02/2025 அன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் சந்தித்து உரையாடிய போது இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் நலன்கள் குறித்து அதிகம் கலந்துரையாடப்பட்டது.

இப்படிப்பட்ட அமைப்பில் நடாத்தும் கூட்டங்கள் , ஊடகவியலாளர் நலன் திட்டங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை தொடருங்கள் … பகிருங்கள்

https://www.facebook.com/profile.php?id=61574554556147

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!