நமது ஊடகத்துறையில் இருக்கும் பலர் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டவர்கள்.இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் முகப்புத்தகங்களில் இருக்கிறார்கள்.
அதுவும் வானொலி ,தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் இப்படி இருக்கும் போது வானொலி பிரபலமும் ,சூரியன் அறிவிப்பாளருமான RJ ரமேஷ் எதிர்வரும் 8 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணைகிறார்.
திருகோணமலையை சேர்ந்த ஹம்ஷி குணபாலசிங்கம் தான் நமது ரமேஷின் வருங்கால அட போங்க சார் வரப்போகும் துணைவி.
இவர் திருகோணமலையில் திருமணம் முடிக்கும் போது அதே நாளில் இரத்தினபுரியில் திருமணம் முடிக்கிறார் நமது ரஞ்சன் அருண் பிரசாந்த்.இவர் சக்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பளாராகவும் தொகுப்பாளராகவும் இருந்தவர்.இப்போது BBC தமிழ் இலங்கை ஊடகத்துறையை கவனிக்கிறார்.
இப்படி இவர்கள் இருவரும் ஒரே நாளில் திருமணம் முடிக்கும் போது இவர்களையே நம்பி இருந்த இவர்களது ரசிகைகள் தான் பாவம்…இனி மேல் இவர்கள் இருவரும் வீடுகளுக்கு நேரத்தோடு ஆஜர் ஆகவேண்டும்
இருவருக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.