80s, 90s கருப்பையா பிள்ளை பிரபாகரன் நேரலை இசை நிகழ்ச்சி

உள்நாட்டு இசைக்கலைஞர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தவும், நமது கலை பாரம்பரியத்தைப் போற்றிக் கொண்டாடவும் ஒரு சிறப்பான நேரலை இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. “உள்ளூர் உற்பத்திகள் பெருக வேண்டும் எனில், இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்; இது கலைக்கும் பொருந்தும்” என்ற உன்னதமான சிந்தனையோடும், “நல்லதோர் வீணை செய்தே! அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ?” என்ற பாரதியாரின் வரிகளைத் தாங்கியும் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

80 மற்றும் 90களின் இனிமையான இசை நினைவுகளை மீட்டுத்தரும் “80s 90s கருப்பையா பிள்ளை பிரபாகரன் LIVE IN CONCERT” இசை நிகழ்ச்சி கொழும்பில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

நிகழ்ச்சி விவரங்கள்:

  • நாள்: 10.10.2026
  • நேரம்: மாலை 06.30 மணி
  • இடம்: Bishop’s College Auditorium, No: 11, Perahera Mawatha, Colombo 03

அழைப்பிதழ்களைப் பெறும் முறை:

இந்நிகழ்ச்சி அழைப்பிதழ் மூலமாக மட்டுமே அனுமதி வழங்கும் நிகழ்வாக அமைகிறது (Invitation Only). பார்வையாளர்களுக்கான அழைப்பிதழ்களை அணுசரணை வழங்கும் ஊடகங்கள் வாயிலாகவும் அல்லது 0776906260 என்ற கைப்பேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டும் பெற்றுக்கொள்ள முடியும்.

இசைப் பிரியர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உள்நாட்டுக் கலைஞர்களின் திறமைக்கு ஆதரவளிக்குமாறு கேட்கப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!