கலை மற்றும் கலைத்துறை சார்ந்த சாதனையாளர்களைக் கெளரவிக்கும் நோக்கில், Youth Stars Entertainment அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 4th Popular Awards (4வது பாப்புலர் விருதுகள்) விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விழாவில் விருதுகளை வென்ற வெற்றியாளர்கள் தங்களது மதிப்புமிக்க விருதுக் கேடயங்களை ஏந்தியவாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இளைஞர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தவும், கலைத்துறை படைப்பாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கவும் இதுபோன்ற விருது விழாக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜெனோசன் ராஜேஸ்வர் முகப்புத்தக பதிவில்
“அந்தோனி”யின் கடினமான இந்த பயணத்தில், ஒரு சிங்கள திரைப்பட விழாவில்
ஈழத்தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்
எனக்கு தயக்கம் இருந்தாலும், தவறுகள் இருந்தாலும்
எங்கள் திறமைக்கு கிடைத்த மேடையில் எங்கள் பாதையை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டியது மிக அவசியம்.
Popular Awards விருதுகளை எங்கள் கைகளில் நாங்கள் தாங்கி கொண்ட ஆஸ்கார் விருதுக்கு நிகரானதாக எண்ணுகிறேன்.
இலங்கை ஆஸ்கார் தேர்வுப் பயணத்திற்கு முதலாவது ஈழத்திரைப்படமாக எங்கள் திரைப்படத்தை விண்ணப்பித்திருக்கின்றோம். கையில் ஆஸ்கார் Tatoo போட்ட நாளில் இருந்து இன்று 10 வருட சினிமா பயணத்தில் எங்கள் கலைகளுக்கான பயணம் மீண்டும் இங்கிருந்து ஆரம்பிக்கின்றது என எண்ணுகிறேன்.

எந்த செயலும் இலகு என்று எண்ணுவதை விட அதை செய்து / முயற்சி செய்து தோற்று போவது மேல். எங்கள் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
