ஷெவான்
தேர்தலில் போட்டியா?
ஷெவான் தேவவரதன் டேனியல் இவரை ஊடக வட்டத்தில் அறியாதவர்கள் இருக்க முடியாது.
MTV / MBC வலையமைப்பின் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இணைந்து கொண்டவர்.தற்போது கேபிடல் மஹாராஜா நிறுவனத்தின் குழும பணிப்பாளராக இருக்கிறார்.
நாடு பூராகவும் கம்மெத்த என்ற வேலை திட்டத்தின் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர்.
கடந்த காலங்களை போன்று எதிர்வரும் காலங்களிலும் கேபிடல் மஹாராஜா நிறுவனத்தின் சார்பில் தேர்தலில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற செய்தி வெளிவந்துகொண்டு இருக்கிறது.
ஏற்கனவே கேபிடல் மஹாராஜா நிறுவனத்தின் சார்பில் புத்திக பத்திரன,SM மரிக்கார் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள்.
எதிர்வரும் பொது தேர்தலில் மொனராகலை மாவட்டத்தில் ஷெவான் தேவவரதன் டேனியல் போட்டியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இவரின் வேட்பு மனு தொடர்பாக ஐ தே க யின் சஜித் தரப்பினருக்கு விருப்பம் இல்லயாம்.
முன்னாள் அமைச்சரும் ,பாராளமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டாரா அவர்களே இந்த எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.இருப்பினும் ஷெவான் தேவவரதன் டேனியல்க்கு தேசிய பட்டியலில் இடம் ஒதுக்கி இருப்பதாக கூறியுள்ளார்.
குறிப்பாக மொனராகலை மாவட்டத்தை தேர்ந்தெடுத்தது காரணம் கமெத்த மூலம் பல கிராமங்கள் இந்த மாவட்டத்தில் ஷெவான் தேவவரதன் டேனியல் தலைமையில் அபிவிருத்தி செய்யப்படுள்ளது.
பாப்போம் பொறுத்திருந்து…..