சக்தி கிரவுன் சீசன் 2 இன் COCH ?
இளம் இசையமைப்பாளர் ஷமீல்
வெற்றிகரமாக முடிந்த சக்தி கிரவுன் சீசன் ஒன்றை தொடர்ந்து இன்று சக்தி கிரவுன் சீசன் 2 ஆரம்பமானது.
இதன் ஆரம்ப நிகழ்வில் குழும தலைவர் செவான் டேனியல் கலந்துகொண்டார்.

ஆரம்ப நிகழ்ச்சியை கணாதீபன் மற்றும் ரோஸைல் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள் .

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக சக்தி டிவியின் பொது முகாமையாளர் குலேந்திரன் உரையாற்றினார் .

நிகழ்வில் சிறப்பு பாடலை பாடி அனைவரையும் மகிழ்வித்த எமது இளம் இசையமைப்பாளர் ஷமீல் இந்த சீஸனின் COCH போட்டியாளர்களை பயிற்றுவிக்கும் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார்.

தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ள ஷமீலுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது எமக்கு மகிழ்ச்சியே
அவருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.