சுருதி பிரபா .. இலங்கை கலைத்துறையில் தனது பெயரை எல்லாத்துறைகளிலும் பதிவு செய்தவர் தான் சுருதி பிரபா .
இசையில் அவர் பல உயரத்தை தொட்டுள்ளார் . தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து பதனி திரைப்படத்தின் மூலம் இசையையமைப்பாளராக தன் பெயரை பதிவு செய்தார் .
தற்போது மற்றுமொரு சாதனை படைக்க களமிறங்கியுள்ளார். ஆம் சிங்கள சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் .ஒரு இயக்குனராக புதிய அவதாரம் எடுத்துள்ளார் .

சொக்லட் பிலிம் பேக்டரி தயாரிப்பில் படத்தில் இசையை நமது சுருதி பிரபா இசையமைக்கிறார்.
அவர் இயக்கும் புதிய சிங்கள படத்தின் பெயர் ஜூன் மாதம் முதலாம் திகதி வெளியாகிறது .
இப்படத்தில் இலங்கையின் முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள் . யார் யார் என்ற விபரத்தை நாம் விரைவில் தருவோம் .
சுருதி பிரபா அவர்களுக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.