சூரியன் மற்றும் ஸ்டார் தமிழ் வானொலியில் நிகழ்ச்சிப்படைத்த RJ பிரஷாந்தன் சாந்த் இன் YOUTUBE பக்கம் தொடர்பாக எமது செய்திப் பிரிவின் அவதானம் சென்றுது.

மிக கடினமான தடைகளை கடந்து அவர் இந்த காணொளிகளை பதிவேற்றம் செய்கிறார் என்று எமக்கு புரிந்தது .
நாம் அவரிடமே கேட்டோம் … வானொலியில் இருந்து விலகி வேறு வானொலிக்கு சென்று நிகழ்ச்சி படைக்காமல் ஏன் YOUTUBE க்குள் சென்றீர்கள் என்று ?
அவர் எமக்களித்த பதில் வியப்பாக இருந்தது
பொதுவாக சிலருக்கு ஒரு கேள்வி வரும் ஏன் வானொலி அறிவிப்பாளர்கள் வானொலியிலிருந்து விலகிய பின்பு youtube தளத்தில் காணொளிகளை போடுகிறார்கள் என்று ..

இவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்று. பணம் உழைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காக மட்டுமே இங்கே எல்லோரும் youtube செய்வதில்லை.
அது ஒரு ஆத்மார்த்தமான உணர்வு, முதல் தடவை நம் குரலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் போது அந்த உணர்வை நாம் உணரலாம்.
பல கஷ்டங்கள் வலிகளை கடந்து அந்த முதல் தடவை வானொலி ஒலிவாங்கியில் நாம் பேசிய அந்த நாளை எந்த அறிவிப்பாளராலும் மறக்க முடியாது.
அந்த தொழில் தரும் சந்தோசம், போதை அதை உலகில் எந்த இன்பத்தாலும் நிரப்ப முடியாது.
ஒருவேளை வானொலியிலிருந்து அறிவிப்பாளர்கள் விலகினாலும் அந்த போதை நம்மை விடாது, மீண்டும் மீண்டும் அந்த கலைத்தாகம் நம்மை போட்டு வதைத்துக்கொண்டே இருக்கும்.
அந்த தாகத்தை நிவர்த்தி செய்யத்தான் youtube என்ற மாற்றீடுக்கு செல்கின்றனர்.
நானும் அவ்வாறு தான், அந்த ஊடக தாகம் என்னை விடுவதாக இல்லை. அது போக விரும்பினாலும் நான் அதை விடப்போவதில்லை. அதனால் தான் நான் வேறு துறையில் தற்போது வேலை செய்தாலும். நேரம் கிடைக்கும் போது youtube தளத்தில் காணொளிகளை பத்திரவேற்றம் செய்கிறேன்.
பார்வையாளர்கள் views மிகக் குறைவாகவே உள்ளது. அது மட்டும் தான் கவலை. இருந்தாலும் வெற்றி தள்ளிப்போகலாம் ஆனால் கட்டாயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்.
RJ Prasanthan Shanth