அறிவிப்பாளர் சக்ஷி மிக சிறு வயதில் இருந்தே ஊடகத்துறையில் இருந்த வருபவர்.

தொலைக்காட்சி சிறுவர் நிகழ்ச்சியில் அறிமுகமானவர் பிறகு இலங்கையின் முன்னணி வானொலிகளில் அறிவிப்பளாராக நேயர்களை மகிழ்வித்துள்ளார்.

தற்போது தமிழ் FM வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளராக கடமையில் இருக்கும் அறிவிப்பாளர் சக்ஷி தமிழில் இருந்து விடைபெற தீர்மானித்துள்ளார்.

நமக்கு தெரிந்த நம்ப தகுந்த வட்டார செய்திகள் இத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது .

தொடர்ந்து 16 வருடங்கள் ஊடக துறையில் இருந்து விலகுவதால் காரணம் என்ன? என்ற கேள்விக்கு அவர் சிரித்துக்கொண்டே இவ்வாறு கூறினார்

புதிய டிஜிட்டல் உலகத்திற்கேற்ற புதிய சிந்தனைகள் என்னிடம் உண்டு , அதற்க்கான முன்னோட்டமாக Saksi TV http://www.saksitv.com/ யை ஏற்கனவே நான் அறிமுகப்படுத்தியுள்ளேன்.. அதன் மூலம் இந்த காலத்திற்கேற்ற பல நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளேன் என்றார் .

இந் நிலையில் அவரை பகுதி நேர அறிவிப்பாளராக சரி நிகழ்ச்சி படிக்குமாறு வானொலிகள் கேட்கிறார்களாம்…

ஏற்கனவே சக்ஷி இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்கள் 50 க்கு மேற்ப்பட்ட வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு பின்னணி குரல் வழங்கியுள்ளார்.

அதுவே அவருக்கு மிகப்பெரிய பக்க பலம்.

எது எப்படியோ இது இலங்கை தமிழ் வானொலிகளுக்கு மிகப்பெரிய இழப்பு தான். இவரை போன்ற திறமைசாலிகள் நிச்சயமாக தமிழுக்கு தேவை … நாம் சொல்ல வருவது தமிழ் வானொலிகளுக்கு…

இவரது எதிர்காலம் சிறப்பாக அமைய இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.