மனதை உருக்கும் தந்தையின் கதை | புற்று நோயைக்கு முற்றுப்புள்ளி

புற்றுநோயை எதிர்த்துப் போராடும் Fight Cancer Team Sri Lanka குழுவின் ஸ்தாபகர் எம்.எஸ்.எச் முகம்மத் அவர்களின் ஒரே மகனான ஹுமைதின் வேண்டுகோளின் பேரில், மகரகம அபேக்சா மருத்துவமனைக்கு அத்தியாவசியமான PET / CT ஸ்கேனரை நன்கொடையாக வழங்குவதற்கான முதன்மை நோக்கத்துடன் புற்றுநோய்க்கு எதிரான செயற்படும் Fight Cancer Team Sri Lanka குழுவானது இலங்கையின் தங்க இதயம் கொண்ட தன்னார்வ பெருமக்களின் சேர்கையாகவே ஸ்தாபிக்கப்பட்டது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள், மொத்தம் 73,512 தங்க இதயம் கொண்ட இலங்கையர்களிடமிருந்து ரூ. 250 மில்லியன் அரச அபேக்சா மருத்துவமனை கணக்கில் வைப்புச் செய்யப்பட்ட ஒரு நாடு தழுவிய நற்திட்டமாக இது மக்களிடம் கொண்டு செல்லப்பட வழிகோவியது.

இலங்கையில் ஏப்ரல் 1, 2018 ஐ ஒரு மனிதாபிமான தினமாக மாற்றி, பெட் ஸ்கேனர் மகாரகம அபேக்சா மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் சுமார் 180,000 ரூபாய் செலுத்தி தனியார் மருத்துவமனையில் பெற வேண்டிய இந்த ஸ்கேன் மஹாரகம அபேக்சாவில் புற்றுநோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

புற்று நோயை ஆரம்பத்தில் இனக்காணும் இந்த ஸ்கேனர் இலவசமாக வழங்கப்பட்டதன் பின்னர் தேசிய வைத்தியசாலையின் முக்கிய வைத்தியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனியார் வைத்தியசாலைகளில் சுமார் 10- 15 லட்ச ரூபாக்கள் செலவிட்டு மேற்கொள்ள வேண்டிய கதிரியக்க புற்றுநோய் சிகிச்சையை இலவசமாக வழங்க அவசியமான சுமார் 100 கோடி ரூபா பெறுமதியான டொமோதெரபி மற்றும் லீனியர் அக்சாலரேடர் இயந்திரத்தை இலவசமாக பரிசளிக்க அபெக்சா மருத்துமனையின் தேசிய சுகாதார அபிவிருத்தி நிதியத்தின் 71275069 எனும் கணக்கிலக்கத்திற்கு பணத்தை ஒன்று திரட்டுவதை அடிப்படையாகக் கொண்டு “பண தென பனஹ” உயிர் கொடுக்கும் ஐம்பது ரூபா செயற்றிட்டத்தின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சுடன் ஆரம்ப ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதோடு, நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அசாதாரண சூழ்நிலைகளிலும் சளைக்காது, சவால்களுக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து இலங்கையின் தங்க இதயம் கொண்ட பெருமக்களின் உதவியுடன் இது வரையில் சுமார் 15 கோடி ரூபாவுக்கு மேல் நிதி திரட்டப்பட்டு எஞ்சிய நிதியையும் திரட்டும் நடவடிக்கையில் இரங்கியுள்ள எமது குழு அபபேக்சா மருத்துமனைக்கு அவசியாமான இந்த அறப்பணியை மிக விரைவில் நிறைவேற்ற உத்தேசித்துள்ளோம்.

புற்றுநோய்க்கு எதிராக ஒரு வலுவான மனித பலத்தை உருவாக்குவதோடு, புற்றுநோயைப் பற்றிய ஒரு தெளிவுப்பாட்டை சமூக மட்டத்தில் உருவாக்கி அதனூடாக புற்றுநோயை வெற்றி கொள்ள அவசியமான நிலையான அறிவு மற்றும் அனுபவத்தின் மூலம் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று நமது மக்களுக்கு அவற்றை தெளிவுபடுத்துவதோடுசிகிச்சைக்காக நிதி உதவி தேவைப்படும் நோயாளர்களுக்கு நேசக்கரம் நீட்டி இந்த அப்பாவி புற்று நோயாளர்களின் விடிவு கருதி மஹரகம அபபேக்சா வைத்தியசாலை உட்பட ஏனைய புற்று நோய் வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு, அரசுக்கு எல்லா சுமைகளையும் கொடுக்காது, இலங்கையின் தங்க இதயம் கொண்ட பெறுமக்களையும் இணைத்துக்கொண்டு எமது நாட்டின் ஏக புற்றுநோய் சிகிச்சையகமாகிய மஹரகம அபேக்சா வைத்தியசாலையை தெற்காசியாவிலே சகல வளங்களாலும் அங்கசம்பூரணம் அடைந்த ஒரு கேந்திர சிகிச்சை தலமாக மாற்றியமைக்க வேண்டும் எனும் உன்னத நோக்கத்தின் அடிப்படையிலேயே எமது குழு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் திரு மொஹமட் அவர்கள் தனது மகனுக்கு எழுதும் கடிதம் போல் ஒரு பதிவை முகப்புத்தகத்தில் இட்டிருந்தார் .அது மனதை மிகவும் உருக்கும் பதிவாக இருந்தது.இதோ

அன்பு மகன் ஹுமைத் .இன்று என் தங்க மகன் ஹுமைத் வாழ்க்கை போரை முடித்து 4 வது ஆண்டு …😭 டெடா.. நாம் இதை இப்படி செய்வோம் .. அதை அப்படி செய்வோம் .. இதை எப்படியாவது செய்வோம் என்ற எனது ஒரே மகன் .. உலகில் அப்பாவின் சிறந்த நண்பன் ..❤️ புற்றுநோய்க்கு எதிரான எனது போராட்டத்தில் என் மகன் அன்று என்னுள் புகுத்திய வலிமையே என்னை இந்தப் பயணத்தில் ஊக்குவித்தது.

அமெரிக்கா, சிங்கப்பூர் Drs , மற்றும் இந்தியாவில் சிகிச்சை செய்ய ஒரு தந்தை என்ற ரீதியில் நான் செய்யாதது எதுவுமில்லை. கடைசியில் மஹரகம அபெக்ஷா வைத்தியசாலைக்கு வந்தபோது.அங்குள்ள பற்றாக்குறைகளை கண்ட ஹுமைட் இன் வேண்டுகோள் என்னவெனில் டெடா..(Dada) உங்கள் போனில் உள்ள நண்பர்களின் உதவியைப்பெற்று இவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்து கொடுப்போம் என்பதே.அதன்பிரகாரமே பெட் ஸ்கேன் திட்டம்(PET Scan Project) ஆரம்பமானது. நம் நாட்டில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு அபேக்ஷா மருத்துவமனையில் வேலை செய்யும் PET ஸ்கேனரை ஹுமைட்டால் பார்க்க முடியவில்லை.

ஆனால் ஹுமைட் மகனால், இந்த முகமது தந்தைக்கு பல உயிர்களைக் காப்பாற்றும் வலிமை கிடைத்தது.வாழ்க்கையில் ஒரு நோக்கம் கிடைத்தது… ஒரு வேளை உணவு தவரவிடப்படினும், அவ்வேளையில் உயிருக்காக போராடும் புற்றுநோயாளிகளின் உயிரை காக்க போராட கிடைத்தமையை எண்ணும்போது எனக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியை நான் இப்போது அனுபவிக்கிறேன்.

என் மகன் இந்த விஷயங்களை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டு சுபர்(Super) டெடா… Well done & doing Dada என என்னை ஆசுவாசப்படுத்துவதை நான் மனதார உணர்கிறேன். உங்களால் முடியும் டெடா.. go ahead என அவன் என்னைத்தேற்றுவதை நான் கேட்கிறேன்.நீ சொல்வதை நான் கேட்கிறேன் .

அன்புள்ள மகன் ஹுமைத் … புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் எனக்கு கொடுக்கப்பட்டுவிட்டு நீ சென்றாலும்.. என்னால் முடிந்த கடைசி நாள் வரை என் மகனின் கனவுக்காக என் உயிரை தியாகம் செய்வேன் .. நூறாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற நான் எல்லா முயற்சிகளையும் செய்வேன் .. அன்று என் மகனுக்கு நான் கொடுத்த வாக்குறுதி இன்றும் என் இதயத்தில் வாழ்கிறது என் மகனே … நான் உனது டெடா மொஹமட் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!