இலங்கையில் தமிழ் YOUTUBE சேனல்களின் ஆதிக்கம் | அதிர்ச்சி ரிப்போர்ட்

தற்போது அனைவர் கைகளிலும் இருப்பது ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் தான்.

அப்படி அது இல்லாதவர்கள் இருந்தால் அவர்களை எதோ ஆதிகால மனிதர்கள் போல் தான் பார்வை.

அதிகமாக ஆண்ட்ராய்ட் தொலைபேசிகள் வைத்திருப்பவர்கள் பிரவேசிக்கும் பக்கங்களில் யூ டியூப் முதன்மை இடத்தை பெறுகிறது.

இந்திய மற்றும் உலக தரம் வாய்ந்த தமிழ் படைப்புகளுக்கு மத்தியில் இலங்கை தமிழ் படைப்புகளும் போட்டி போட்டு கொண்டு தான் இருக்கிறது.

குறிப்பாக விறல் விட்டு எண்ணக்கூடிய யூ டியூப் பக்கங்கள் மட்டுமே 1 லட்சம் சந்தாக்காரர்களை தாண்டியுள்ளது.

இதில் முதலாவதாக நாம் பார்ப்பது ஹிஷாம் வழங்கும் யூ டியூப் பக்கம் இவர் 392000 சந்தாக்காரர்களை கொண்டுள்ளார்.நான்கு நாட்களில் இவரது ஒரு படைப்பை சுமார் 26000 பேர் பார்த்து ரசிக்கிறார்கள் .

அடுத்தது நாம் பார்ப்பது சீஸ் கொத்து வழங்கும் யூ டியூப் பக்கம் .226000 சந்தாக்காரர்களை கொண்டுள்ளனர் .ஏழு நாட்களில் இவர்களது ஒரு படைப்பை சுமார் 70000 பேர் பார்த்து ரசிக்கிறார்கள் .

அடுத்தது நாம் பார்ப்பது சந்துரு மேனகா வழங்கும் யூ டியூப் பக்கம் .166000 சந்தாக்காரர்களை கொண்டுள்ளனர் .இரண்டு நாட்களில் இவர்களது ஒரு படைப்பை சுமார் 90000 பேர் பார்த்து ரசிக்கிறார்கள் .

அடுத்தது நாம் பார்ப்பது டிக்கா ப்ரோ வழங்கும் யூ டியூப் பக்கம் .144000 சந்தாக்காரர்களை கொண்டுள்ளார் .ஒரு நாளில் இவரது ஒரு படைப்பை சுமார் 26000 பேர் பார்த்து ரசிக்கிறார்கள் .

அடுத்தது நாம் பார்ப்பது ஓசி wifi வழங்கும் யூ டியூப் பக்கம் .122000 சந்தாக்காரர்களை கொண்டுள்ளனர் .நான்கு நாட்களில் இவர்களது ஒரு படைப்பை சுமார் 56000 பேர் பார்த்து ரசிக்கிறார்கள் .

இப்படி தான் இவர்களின் படைப்புகளை நமது இணையத்தள பாவனையாளர்கள் பார்க்கிறார்கள்.

இவர்களது படைப்புகள் இன்னும் சிறப்பாகும் பட்சத்தில் இந்த தொகை அதிகமாகும் வாய்ப்பும் உள்ளது.

இவர்கள் அனைவருக்கும் நமது கலைஞர்களுக்கான உங்கள் இணையத்தளத்தின் இனிய வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!