இயக்குனர் ராதயனோட ஆடத்தனை பார்க்க தானே போறிங்க


தொடர்சியாக தனது சிறப்பான முயற்சிகள் மூலம் பல நல்ல படைப்புகளை தரும் இயக்குனர் ராதேயன் தனது அடுத்த முயற்சியாக ஆடத்தன் திரைப்படத்தினை உருவாக்கவுள்ளார்.

இலங்கைக் கலைஞர்களின் முயற்சியில் உருவான தமிழ் திரைப்படம் ஆடத்தன் . நமது திரை துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எடுக்கப்பட்ட ஒரு மிக பெரிய முயற்சி என்று கூட கூறலாம்.

Manoj Sivapiragasam கதையில் Ratheyan Gnanaprakasam இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் ஆடத்தன் திரைப்படத்தின் முன்னோட்டம் 27.04.2019 சனிக்கிழமை வெளியாகியது .

‘ஆடத்தன்’ இயக்குனர் ராதயன். கதாசிரியர் மனோஜ் , இசையப்பாளர் நிருக்‌ஷன், உடபட மற்றும் அந்த படக்குழுவினர் அனைவருக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

ஆடத்தன் கதை மற்றும் திரைக்கதை எழுதிய மனோஜ் சிவபரகாசம் இவ்வாறு கூறுகிறார் .

ஒரு காதல் கொண்ட கதை பல தளங்களில் கற்பனைகள் கண்டேன்,இது புதிது எனக்கு .கதாபாத்திரங்களுடன் ஒருமித்து போன கதை..
ஆடத்தன் (304) தூக்கம் மறப்பதற்காய் ஆடப்படும் ஆட்டம்,இந்த முன்னோட்ட பதிவு நாங்கள் இன்று இடும் வரை தூக்கம் தொலைத்த ஆட்டமும் கூட..


 https://youtu.be/2atvUAfjUtU


எதிர்பார்ப்புக்கள் ஏற்றங்கள், ஏமாற்றங்கள் இரண்டையும் தரும்…..ஏற்றங்கள் கண்டு நாம் இறுமாப்பு கொள்வதும் இல்லை,ஏமாற்றங்கள் தரும் பாடங்களை தவிர்ப்பதும் இல்லை…
பிரபல குத்து சண்டை வீரர் மொகமட் அலி இன் கருத்தின் படி உலகம் இரண்டாவது வருபவர்களை ஞாபகம் வைத்து கொள்வதில்லை, ஆனலும் நாம் உணர்கின்றோம் முதன்மையான படைப்பு என்பதை விட நிறைவான படைப்பயே நாம் எதிர்பார்க்கின்றோம்.இந்த முன்னோட்டத்தை ஒன்றுக்கு இரு தடவை பார்த்து இதில் உள்ள குறைகளை விமர்சனமாய் கேட்பதே எங்களின் பாதையை இன்னும் நேர்த்தியாக்கும்.ஏன் எனில் நாம் இன்னும் வளர்ந்து வரும் கலைஞர்களே.
இந்த உலகமும், நேரமும் ஒன்றை அறிவித்து ,நாம் தொடர்ந்து சுழல்கின்றோம் அதனால் தான் பெறுமதியாகின்றோம் என்று நாங்கள் இங்கு சீட்டுக்களை சுழற்சியில் விட்டோம் ஆடத்தனாய்….
உங்கள் ஆசியே எங்கள் வெற்றி..
என் அணி என் பலம் .. இவ்வாறு தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக் கலைஞர்களின் முயற்சியில் உருவான தமிழ் திரைப்படம். ‘ஆடத்தன்’ இயக்குனர் ராதயன். கதாசிரியர் மனோஜ் , இசையப்பாளர் நிருக்‌ஷன், உடபட மற்றும் அந்த படக்குழுவினர் அனைவருக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.

Movie : Aadaththan Directed by : Ratheyan Story/Screenplay : Manoj Editing : Krishanth Music : Niru Cinematography : Ratheyan Written by : Manoj Art Direction : Aja. Aj, Krownsan, Sharon, Thanushan Associate Director : Dhuja Stills : Aja Trailer Rec : Sreekanth Studio Designs : Ratheyan P.R.O : Elvis Dialogues : Manoj &Akshaya VFX : Ratheyan S.F.X : Niru & Senu DI : Ratheyan Cast : S.Bajindra | Denick Barthelot | T.Krownsan | Yindra | A.D. Elvis | S.Manoj | T. Vidushaan | M. Saharan | Darshik | Goabi Ramanan | S.M.Karan | A.Sritharan | Vithush | Devon | Chris thanu | M.Dananchayan | Senu | Gnani | Juliana | Arasarednam | Ratheyan | Public Music Label : AJ music on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!