இயக்கனர் சோமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் ரேணுகா பாலசூரியவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள “சுனாமி” திரைப்படத்தின் முன்னோட்டமானது வியாழக்கிழமை வெள்ளவத்தை சவோய் திரையரங்கில் வெளியிடப்படப்பட்டது.
இத்திரைப்படம் இலங்கையில் நடந்த இயற்கை அழிவான சுனாமியின்போது நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “சுனாமி” எடுக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நிரஞ்சனி சண்முகராஜா மற்றும் தர்ஷன் தர்மராஜ் பிரதான பாத்திரத்தில் நடிதத்துள்ளார்கள். அத்தோடு சிங்கள திரையுலகின் பிரபலமான நடிகர், நடிகையர்களான பிமல் ஜயகொடி, ஹிமாலி சயுரங்கி ஆகியோரோடு இன்னும் பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் சிங்களம் மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படத்திற்கு விஸ்வ பாலசூரிய ஒளிப்பதிவு செய்துள்ளார். சிரேஷ்ட இசையமைப்பாளர் ரோஹன வீரசிங்க இசை அமைத்துள்ளார்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக இரண்டு குடும்பங்கள் தமது குழந்தையை தொலைத்து விடுகின்றனர்.
இந்த நிலையில், குழந்தை யாருக்கு சொந்தமாகின்றது என்ற அடிப்படையில் இத்திரைப்படம் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர் ராதிகா வின்சன் இத் திரைப்படம் தொடர்பாக தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்
நம்மவரின் படைப்புகளை நிச்சயம் பாராட்ட வேண்டும்….
அந்த வகையில் நேற்றைய தினம் “சுனாமி”திரைக்காவியத்தை கண்டு மகிழ்ந்தோம்…..சுனாமி சொன்ன கதை நம் அனைவரினதும் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது…..திரையில் தோன்றிய அத்தனை நட்சத்திரங்களும் தங்கள் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்….. குறிப்பாக நிரஞ்சனி சண்முகராஜா தத்ரூபமாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்….
காட்சிகளை அற்புதமாக இயக்குனர் திரு.சோமரத்ன திசாநாயக்க அவர்கள்
வடிவமைத்திருந்தார்…மொத்தத்தில் சுனாமி அற்புதமான திரைக்காவியம்….
இலங்கை சினித்துறையில் ……திரைப்பட குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.இவ்வாறு எழுதியுள்ளார்
மூத்த கலைஞ்சர் சந்திரசேகரன் இத் திரைப்படம் தொடர்பாக தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்
ரேணுக்கா பாலசூரியவின் தயாரிப்பில்
சோமரத்ன திசாநாயக்கவின் இயக்கத்தில் உருவான திரைப்படம்
සුனாමී(சுனாமி)
இன்று இரவு இந்தத் திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
திரைப்படம் ஆரம்பமாவதற்கு முன்னர் தயாரிப்பாளர் ரேசுக்கா பாலசூரிய உரையாற்றும்பொழுது
“சிங்கள ரசிகர்களுக்காக ஒரு பிரதி…
தமிழ் ரசிகர்களுக்காக ஒரு பிரதி…
வெளி நாட்டவர்களுக்காக இன்னுமொரு பிரதி என மூன்று விதமாக இந்த திரைப்படத்தின் பிரதிகளை உருவாக்கி இருக்கிறோம்”
என்று சொன்னார்.
அவசியமே இல்லை காண்பிக்கப்பட்ட பிரதியை அனைவரும் புரிந்துகொள்வார்கள்.
அவ்வளவு சரளமாக இருந்தது திரைப்படம்.
ஆரம்பமே நம்மை நாற்காலியின் விளிம்பிற்கு இழுத்து வந்து விடுகிறது இந்தத் திரைப்படம்.
எதிர்பார்ப்பு…இறுதிவரை இம்மியளவும் குறையவே இல்லை.
நிஜத்தில் நடந்த கதை.
கிழக்கு மாகாணத்தில் சுனாமி தாக்கியபோது அங்கு வாழ்ந்த தம்பதியரும், கண்டியில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த தம்பதியரும் ஏககாலத்தில் தம் இரண்டரை வயது நிரம்பிய மகள்களை தொலைத்துவிடுகிறார்கள். விதிவசத்தால் தமிழ்ப் பெற்றோரின் மகள் மட்டும் சிங்களப் பெற்றோரிடம் சேர, தோற்றத்தின் ஒற்றுமை காரணமாக, அது தம் பிள்ளைதான் என நம்பி வளர்க்கிறார்கள்.
பத்துவயதாகும் போது தம் குழந்தையின் பேச்சில் சில தமிழ் சொற்களும் கலந்து வருவதுகண்டு மாந்திரீகரிடம் விளக்கம் கேட்க முன்ஜென்மத்தில் வாழ்ந்த ஒரு தமிழ் பெண்ணின் ஆவி இச் சிறுமியின் உடலில் புகுந்து விளையாடுவதாக கூறப்படுகிறது. இக்குழந்தை பற்றிய செய்தியை பத்திரிகை மூலம் அறிந்த தமிழ் பெற்றோர் தேடி வந்து தம் குழந்தையை அடையாளம் கண்டு அக்குழந்தையை உரிமை கோரி நீதிமன்றத்தை நாடுகிறார்கள்.
பெற்ற தாயின் பாசம் – வளர்ப்புத்தாயின் பாசம்
இரண்டுக்கும் இடையில் அல்லாடும் குழந்தையின் மனப் போராட்டத்தை அற்புதமாய்ச் சித்தரித்திருக்கிறார் சோமரத்ன திசாநாயக்க.
சர்வதேச மட்டத்தில் ஒப்புநோக்கி பாராட்டப்படவேண்டிய ஒரு திரைப்படம் சுனாமி .இந்தத் திரைப்படத்தின் முக்கிய பாத்திரங்களான
தமிழ் பெற்றோராக நடித்திருக்கும் நிரஞ்சனி சண்முகராஜாவும்,
தர்ஷன் தர்மராஜும் தங்கள் நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரங்களுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.
இவர்களுடன் ஜெயரஞ்சன் யோகராஜ், ரஞ்சனி ராஜ்மோகன், சத்யப்பிரியா போன்ற தமிழ் கலைஞர்களும் இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
இவர்கள் மட்டுமல்ல சிங்களப் பெற்றோர், சின்ன குழந்தைகள் என அத்தனை பாத்திரங்களில் நடித்தவர்களும் வெகு சிறப்பாக நடித்து ரசிகர்களைக் கவர்கிறார்கள்.
குறிப்பாக பிரபா எனும் குழந்தை பாத்திரத்தில் நடித்திருக்கும் குழந்தை அற்புதமாக நடித்து அனைவரது கண்களையும் கலங்க வைக்கிறது.
அனைவருக்கும் பாராட்டுகள்.
சுனாமி பார்ப்பவர் அனைவருக்கும் நல்ல திரைப்படம் ஒன்றினைப் பார்த்தோம் என்ற திருப்தி நிச்சயமாய்க் கிடைக்கும்.
இந்தத் திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட
அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.இவ்வாறு எழுதியுள்ளார்
இந்தத் திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட
அனைவருக்கும் இலங்கை கலைஞர்களின் படைப்புகளை எந்த வித பாரபட்சமும் இன்றி சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் இலங்கையின் இலாபத்தை எதிர்பார்க்காத ஒரே ஒரு ஊடகமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.