பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாம் தனிப்பட்ட ரீதியில் எதிரி என்றாலும் நமது நாட்டை சேர்ந்தவர்கள் அதில் கலந்து கொள்வதால் நாம் பேச வேண்டிய நிலையில் உள்ளோம்.
நமது நாட்டை சேர்ந்த லொஸ்லியாவுக்கு நேற்றைய நிகழ்ச்சியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது,அவரது வாழ்க்கையில் நடந்த சோக சம்பவங்களை பகிர்ந்துகொள்ள்ள….லொஸ்லியா ஆரம்பத்தில் தனது வாழ்க்கையை பற்றி கூறிக்கொண்டு வரும் போது இடையில் தனது வாழ்க்கையில் நடந்த மிக பெரிய சோகத்தை சொல்ல ஆரம்பித்தார்.
தனது சகோதரிக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை அனைவர் மத்தியிலும் பகிர்ந்தார்,
அவரது தந்தை தொடர்பாக பேசிய லொஸ்லியா தனது தந்தையை பிரிந்து 10 வருடங்கள் என்றும் அவரை பார்க்க ஆசையாக இருப்பதாகவும் கூறினார்.
தனது சகோதரி எடுத்த முடிவை போன்று யாரும் தவறான முடிவை எடுத்து விட கூடாது என்று அனைவரிடமும் கேட்டு கொண்டார்.