Rap Machines னின் ‘ராப்மச்சி’ 27 இல் வருகிறான் ADK யின் கனவு நனவாகுமா?

Rap machines இசை நிறுவனம் ‘ராப்மச்சி’என்ற புதிய பாடல் ஒன்றை வெளியிட உள்ளது.

இந்த முயற்சி ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்ஷங்கர்ராஜா மற்றும் பல புகழ் பெற்ற இசை அமைப்பாளர்களின் இசையில் பாடிய ராப் இசை கலைஞர் ADK யினால் ஆரம்பிக்கப்பட்டது.

இப்பாடலை ADK தவிர, இலங்கை, இந்தியா, மலேஷியா போன்ற நாடுகளில் உள்ள Rap Machines நிறுவனத்தின் இசை கலைஞர்கள் பாடியுள்ளனர்.

குறிப்பாக இலங்கையில் “டீக்கடைபசங்க (TKP)” குழுவை சேர்ந்த நிரோஷ் விஜய், க்ரிஷ் மனோஜ், ஜீவிதன், இந்தியாவை சேர்ந்த Jack Styles & MC Sanna ,மற்றும் மலேசியாவை சேர்ந்த Shastan Kurup, Elvi, இப்பாடலுக்காக தங்கள் குரல்களை வழங்கியுள்ளார்கள்.

இந்த பாடல் Rap Machines உத்தியோகபூர்வ YouTube சேனலில் ஜூலை 25 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இப்பாடலுக்கான இசையை இலங்கையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ‘K2’ என அழைக்கப்படும் கவிஷ்க வழங்கியுள்ளார். இவர் இலங்கையில் பல சகோதர மொழிப்பாடல்களில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடல் உலகெங்கும் உள்ள பல தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளில் ஒளி மற்றும் ஒலிபரப்பப்படவுள்ளது. தமிழ் ராப் இசையை உலக அளவில் கொண்டு சேர்ப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.

www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!