தர்ஷன் இந்த பெயர் இன்று அனைத்து சமூக வலைத்தள ஆர்வளர்களால் பேசப்படும் பெயர்.
ஒருவர் மலேசிய தர்ஷன்….இலங்கை மட்டுமில்லாமல் உலக தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அடிமையாக்கி வைத்துள்ள பிக் பாஸ் என்ற சமூக சீரழிவு நிகழ்ச்சியில் இலங்கை தமிழனாக பங்குபற்றும் தர்ஷன்.
மற்றவர் நாம் அனைவரரும் அறிந்த தெரிந்த இலங்கை நடிகர் தர்ஷன் தர்மராஜ்.கடந்த 28 ஆம் திகதி நடந்த தேரென தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில் இலங்கையின் சிறந்த திரைப்பட நடிகராக தெரிவு செய்யப்பட்டவர்.
ஆனால் கடந்த ஒரு வாரமாக இலங்கை இணையத்தள ரசிகர்களால் மலேசிய தர்ஷன் பேசப்பட்டார்.அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்தது.
இந்த சந்தோசத்தில் கடுமையான உழைப்பு ,போட்டி,பொறாமை இவற்றுக்கு மத்தியில் ஒரு தமிழனாக சாதித்து காட்டிய நமது ராகவனை தர்ஷனை பாராட்டாமல் இருக்க முடியுமா?
ஒரு வீட்டில் 100 நாட்கள் வெறும் 15 பேருடன் போட்டி போட்டு ஒரு தமிழனாக அதுவும் ஒரு இலங்கை தமிழனாக தர்ஷன் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அதே நேரத்தில் நமது நாட்டில் கிட்டத்தட்ட 21 மில்லியன் மக்களில் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்ட ராகவனை தர்ஷன் தர்மராஜுக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.