ஜெறாட்நோயல் – தேவயானி கூட்டணியில் உருவாகும் “திமிரழகா”: முதல் பார்வை வெளியானது.
ஈழத்து கலைத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “திமிரழகா” மியூசிக் வீடியோவின் முதல் பார்வை (First Look Poster) வெளியீட்டு விழா கொழும்பில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.











தலைமை மற்றும் வெளியீடு: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரும், பிரபல Black Night இசைக்குழுவின் ஸ்தாபகருமான G.I. சார்ல்ஸ் பிரதீப் தலைமையில் இந்த விழா இடம்பெற்றது. கண்ணகி கலாலயம் மற்றும் தேசிய கலை அரண் கலைஞர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பில், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இப்பாடலின் பதாதை (Poster) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
கலைஞர்களின் சங்கமம்: ஈழ மண்ணின் மூத்த கலைச் சுடரான ஜெறாட்நோயல் மற்றும் தேவயானி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்பாடலை, லவ்லி வினோத் இயக்கியுள்ளார். AVT Production & VK Brothers தயாரிப்பில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு வெற்றி சிந்துஜன் இசையமைக்க, திலக்ஷன் மற்றும் டிலாணி ஆகியோர் தங்களது இனிமையான குரல்களால் உயிர் கொடுத்துள்ளனர்.
கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள்: கண்ணகி கலாலயத்தின் தலைவர் A.K. இளங்கோ, உப தலைவர் A. சுரேஷ் குமார், உப செயலாளர் வினோதினி சுரேஷ்குமார், பொருளாளர் M.F.M நசார், தேசிய ஒருங்கிணைப்பாளர் அப்துல்லா ரியாஸ் மற்றும் சமூக சேவையாளர் கலியபெருமாள் ஜெயந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் சகோதர மொழி இளம் பாடகர் G.I. துசித்த ரய்யான் மற்றும் H.P. அசினி இமதி பத்திரன ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக இணைந்து கொண்டனர்.
மிக விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்பாடல், தொழில்நுட்ப ரீதியாகவும் கலை ரீதியாகவும் உயர்தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் குழு (Technical Team):
இயக்கம்: லவ்லி வினோத் (Lovely Vinoth)
இசை: வெற்றி சிந்துஜன் (Vetti Sinthujan)
ஒளிப்பதிவு: KVM விது (KVM Vithu)
பாடலாசிரியர்: வெற்றி துஷ்யந்தன் (Vetti Thushyanthan)
படத்தொகுப்பு: சிந்துஜன் Vf (Sinthujan Vf)
கலை இயக்கம்: டேரியன் (Darien)
ஒப்பனை: கிரிஜாஜினி (Kirijajini)
தயாரிப்பு நிர்வாகம்: பிரியங்கன் (Priyankan)
பதாதை வடிவமைப்பு: ராஜீவன் தயாபரன்
