லொஸ்லியா சமூகம் இன்று சொல்லி திரியும் பெயர்.எல்லா பக்கத்திலும் இவருக்கு எதிர்ப்பு அலைகள்.
பெயரில் லாஸ் இருப்பதாக கமல் சொல்லிவிட்டாராம் அதை வைத்துக்கொண்டு ஒரே ஆர்ப்பாட்டம்.
யார் இவர்கள் எதற்கு லொஸ்லியாவின் பக்கம் அதிகம் தங்கள் கருத்துக்களை அள்ளி வீசுகிறார்கள்.
முதலில் நாம் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் லொஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் வியாபார நோக்கிற்க்காகவே இந்த பாவப்பட்ட நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் தமிழர்களை இந்த நிகழ்ச்சியை பார்க்க வைக்கவே இலங்கையர்களை களம் இறக்கி இருக்கிறார்கள்.
சூப்பர் சிங்கரில் இலங்கை பாடகி வந்ததால் அதிகம் ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் பார்த்துள்ளார்கள்.ஆகவே தான் இந்த முயற்சி.
தொடர்ந்து லோசலியாவை கலாய்ப்பதால் அவர் வாயால் நான் மூன்று வாரம் மட்டும் தான் இருப்பேன் என்று சொல்ல வைத்து விடாதீர்கள்.