நமது படைப்புகளுக்கு நல்ல விமர்சனம் கிடைக்க வேண்டும்.அப்படி என்றால் எமது படைப்பாளிகள் மத்தியில் ஒற்றுமையும் ,அன்பும் வேண்டும்.
பாரதிமைந்தனின் வரிகளில் ஸ்ரீநிர்மலனின் இசையில் சுஐி,றேனு மற்றும் றதீஸ் இன் நடிப்பில் அஐிதின் நடன பயிற்சியில் ஜெயக்குமார் நிதர்ஷனின் இயக்கத்தில் உருவாகிவரும் சிகரம் கலைக்கூடம் (முல்லைத்தீவு) வழங்கும் காதல்சொல்லவந்தேன் காணொலிப்பாடலின் அறிமுக முதற்பார்வை சுவரொட்டி வெளியாகியுள்ளது.
காதலை கானமாக சொல்லி காதலில் உங்களை நிறைத்திட வருகின்றோம் விரைவில் “காதல் சொல்ல வந்தேன் ” அழகான காணொளி பாடலுடன் விரைவில் ஒரு புதிய படைப்பு வருகிறது.
உள்ளத்து காதல் உணர்வுகளை வரிகளாக்கி
காதல் சொல்ல காத்திருக்கும் காதல் உள்ளங்களுக்கு காதல் தூது விட வருகிறார்கள்.
பலரின் திறமைக்கு களம் அமைத்து கொடுத்து வெற்றியை நோக்கிய பயணமாக உங்கள் அன்புடனே வர காத்துள்ள இவர்கள் அனைவரது ஆதரவுவையும் எதிர்பார்க்கிறார்கள்.
பாடல் வெற்றி பெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.