Zee தமிழில் கலக்கும் நம்ம தாமிரா
பலரது திறமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த Zee தமிழின் ச ரி க ம ப நிகழ்ச்சி நமது நாட்டை சேர்ந்த பலருக்கும் வாய்ப்பு வழங்கி வருகிறது.
zee தமிழ் தொலைக்காட்சியின் sa re ga ma pa பாடல் நிகழ்ச்சியில் பலத்த போராட்டாங்கள் போட்டித் தெரிவுகளுக்குப் பின் நமது ஈழத்து இயக்குனர் மதி சுதாவின் மருமகளான ”தாமிரா” வும் உள் நுழைந்துள்ளார்.
ஏற்கனவே கனடாவின் tamil one superstar ஆகியிருக்கிறார் அத்துடன், சக்தி குளோபல் ஸ்ரார் போட்டியிலும் தெரிவாகியிருந்த தாமிராவின் தொடர்ச்சியான முயற்சி மற்றும் பயிற்சிக்கு கிடைத்த வரப் பிரசாதம் இதுவாகும்.
ஈழத்துப் போட்டியாளர்களை இந்திய ஊடகங்கள் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டிருந்தாலும் தாமிரா இப் போட்டிக்கு தகுதியானவர் தான் ஏனென்றால் நாம் இந்தியா ஊடகங்களைக் குறையாகக் கூறிக் கொண்டிருந்தாலும் அவர்களை விட எம்மவர் தான் அப் போட்டிகளில் ஈழத்தை ஊறுகாயாகப் பயன்படுத்துவர். போட்டிகளுக்குப் பின் தான் அவர்கள் ஈழம் என்பதே அவர்களுக்கு நினைவுக்கு வரும்.
ஆனால் தாமிரா சிறு வயதிலேயே பல தாயகப் பாடல்களைப் பாடியுள்ளார் பாடிய பின் இலங்கை வந்தும் சென்றுள்ளார்.
அவர் தந்தை சார்பாக என்னில் ஒரு குற்றச்சாட்டும் குறையும் இருக்கிறது. 2016 இலேயே அவரை வைத்து முள்ளிவாய்க்காலின் கடற்கரையில் ஒரு பாடல் செய்வதற்கான கதையும் திட்டமிட்டு அவர் பணமும் தயாராக வைத்திருந்தாலும் மதி சுதாவின் வேலை மற்றும் திரை முயற்சிகளால் அதை தொடவே சந்தர்ப்பம் அமையவில்லை , இந்த ஆண்டு ஆரம்பத்திலும் அவரை வைத்து ஒரு பாடல் செய்ய இருவரும் திட்டமிட்டோம் அதுவும் இந்த வருடத்துக்குள் சாத்தியமில்லை.
வெற்றிப்படிகளில் ஏறிச் செல்லும் தாமிராவுக்கு என் உளப்பூர்வ வாழ்த்துக்கள்.
தாமிரா வெற்றி பெற www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.