ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு சு.க எம்.க்கள் கடிதம்..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான குழுவினருடன் முற்போக்குக் கூட்டணியொன்றை அமைக்கவும் அக்கூட்டணிக்குத் தலைமை வகிக்க வேண்டுமெனவும், அக்கடிதத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (06) நண்பகல் ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா, பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, பைஸர் முஸ்தபா, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, லசந்த அழகியவன்ன, வீரகுமார திசாநாயக்க, துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீயானி விஜேவிக்ரம, மொஹான் லால் கிரேரு, சாந்த பண்டார ஆகியோரே, இந்த வேண்டுகோள் கடிதத்தை, ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.