எமது கதையை இதை விட யாரும் பாடலாக்க முடியாது
வா தமிழா
நீ வந்தது நலல்து…
முள்ளிவாய்க்கால் பத்தாண்டு எழுச்சியாய் எம் இளம் தலைமுறைக்கான காணிக்கை…சாம்பலில் இருந்து எழுது “வா தமிழா”
இந்த வாசகங்களை பார்த்தவுடன் எதோ பத்தோடு பதினொன்று என்று தான் யாரும் நினைப்பார்கள் .
10 நிமிடமும் 25 வினாடிகளுக்கு கொண்ட இந்த பாடலை முழுமையாக பார்க்காதவன் தமிழனாக இருக்க முடியாது.
ஒரு பாடலுக்கு ஏன் இத்தனை பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் குவிகிறது என்றால் உணர்வுபூர்வமாக தயாரிக்கப்பட்ட பாடல் என்பதனால் தான்.
மிதுனா ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் தன் தேசத்தின் வலியை புரிந்துகொண்ட இயக்குனராக களமிறங்கியிருக்கிறார்.அவரை பாராட்ட வார்த்தைகள் தேடுகிறோம்.
சஞ்சய் , மிதுனா , கபில் ஷாம் , RJ ஜினு , நியூட்டன் , புவி கரண் உள்ளிட்ட அனைவரும் பாடலுக்காக நடிக்கவில்லை.பத்துவருடத்திற்கு பின்னால் எம்மை அழைத்து சென்றுள்ளனர்.
சசிகரனின் தொகுப்பு அடுத்து என்ன நடக்கும் என்பதை விட நடந்தவையை உண்மையா எனும் சந்தேகத்தை பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
கோகுல் சாந்தன் ,மாணிக்கம் ஜெகன் இவர்கள் இருவரின் குரல் சம்பவங்களுக்கும் ,காட்சிகளுக்கும் இடையில் ஒரு பிணைப்பை கொண்டுவந்துள்ளது.
மாணிக்கம் ஜெகன் எழுதிய வரிகளின் வீரியத்திற்கு சிவா பத்மயன் உயிர் கொடுத்திருக்கிறார்..சபாஷ்
ஐங்கரன் கதிர்காமநாதன் ஒட்டுமொத்த புலம்பெயர்ந்தவர்களுக்கு சொல்லும் பாடம் தான் இந்த வா தமிழா.
STANDARD வீடியோ வில் பதிவாகிய காட்சிகள் வெறும் படச்சுருள் அல்ல .அது தமிழினத்தின் உடன் பிறப்புகளின் இறுதி நேர க்ளைமேக்ஸ்.
பாடல் குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.
DIRECTED BY MITHUNA
PRODUCED BY AINHARAN KATHIRGAMANATHAN
MUSIC : SIVA PATHMAYAN
LYRICS : MANICKAM JEGAN
SINGERS : KOKULAN SANTHAN, MANICKAM JEGAN
CINEMATOGRAPHY : STANDARD VIDEO
EDITING : SASIKARAN YO
CAST : SANJAY , MITHUNA , KAPIL SHAM , RJ JINU , NEWTON , PUVI KARAN.