நடிப்பு என்பது சர்வசாதாரணமாக வருவதல்ல.அது ஒரு கலை.அந்த உன்னத கலையை நாம் நேசிக்க ஆரம்பித்தால் மட்டுமே எமக்கு அதன் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.
அப்படிப்பட்ட நடிப்பு மூலமாக சினிமாத்துறையில் சாதிக்க பலர் தயாராக இருக்கிறார்கள்.இயக்குனர் வர்மனின் தெருமுகன் புதிய பல திறமைகளை வெளிக்காட்டிய படைப்பாக அமைந்துள்ளது.
வர்மனின் இயக்கத்திலும் டிருசாந்|பிந்துசன்|கமலன்|சாமிலன்|இராகவன்|செல்லக்குட்டி ஐயா|முல்லை ரமணன் ஐயா|தவமணி அம்மா|கமலாதேவி அம்மா மற்றும் பலரின் நடிப்பில் சாமிலன் மற்றும் அபிலக்சனின் ஒளிப்பதிவிலும் கானுஜன்|டெனித்தின் உதவி இயக்கத்திலும் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட குறும்படம்.]
இங்கு யார் பெரிய படம் எடுக்கிறார்கள் ,யார் சிறிய படம் எடுக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.அந்த படைப்பில் இருக்கக்கூடிய திறமைகள் தான் முக்கியம்.
எது எப்படியோ தெருமுகன் மூலம் வர்மன் நல்ல படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுத்துள்ளார்.
தெருமுகன் படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.