எங்கே செல்லும் இந்த பாதை
கனடா நாட்டில் நடந்த ஒரு இரவு நேர விருந்துபசாரத்தில் எடுக்கப்பட்ட படம் இது.
இதுப்போன்ற விருந்துபசாரங்களில் இது மாதிரியான நடனங்கள் ஆடப்படுகிறதாம்.அதுவும் வயதான எமது புலம் பெயர்ந்த சொந்தங்கள் இந்த ஆட்டத்தை தான் விரும்புகிறார்களாம்.
சரி இருக்கட்டும்.உங்கள் பணம் ,உங்கள் தேவை நீங்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றீர்கள்.ஆனால் நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறதல்லவா அதை மறந்துவிட்டீர்கள் அல்லவா.
நாளை உங்கள் மகன் ,உங்கள் பேரப்பிள்ளைகள் ,உங்கள் உறவினர்கள் இதை தானே பின்பற்ற போகிறார்கள்.
விதையுங்கள் அது கனடாவாக இருந்தால் என்ன கனகராயன்குளமாக இருந்தால் என்ன நமது மொழியை ,கலாச்சாரத்தை விதையுங்கள் அவை நல்ல பலனை தரும்.