இலங்கையின் தனியார் ஊடகங்களில் நாட்டின் மீது அளவுக்கதிகமான அன்பு கொண்ட ஊடகம் என்றால் அது MBC தான்.
சமீபத்தில் நடந்த கொடூர குண்டுத்தாக்குதலுக்கு பிறகு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் இருந்து அனைவரையும் ஒன்றுபடுத்த ஒரு நல்லிணக்க பாடலை தயாரித்த பெருமை MBC ஊடக வலையமைப்புக்கே சேரும்.
இந்த பாடலில் நமது கலைஞர்கள் சிலரும் தமிழில் பாடியுள்ளார்கள்.சிவகுமார், மஹிந்தகுமார் ,நிலுக்ஷி மற்றும் சாஹித்யா ஆகியோரும் தங்கள் பங்களிப்பை செய்துள்ளார்கள்.
இந்த பாடலை இலங்கையின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரரான ஷான் விக்ரமசிங்கவின்TNL தொலைக்காட்சியும் ஒளிபரப்பி ஊடக வரலாற்றில் ஒரு புரட்சியை செய்துள்ளனர்.
இந்த ஆரோக்கியமான பயணம் சிறந்த விடயம் என்பதால் இது தொடரவேண்டும் ஏனைய போட்டி தொலைக்காட்சிகளும் இந்த பாடலை ஒளிபரப்பி அனைவருக்கும் முன் மாதிரியாக செயற்பட வேண்டும் என்பதே எமது ஆசை.
MBC ,ரூபவாஹினி ,டண்ல நிறுவனங்களுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.