இசை கலைஞர்கள் மூலம் சமூகத்திலும் மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மாற்றங்கள் நிகழ கூடிய படைப்புக்களை நாம் எப்போதும் வரவேற்போம்.
அந்த வகையில் RAP சொல்லிசை கலைஞர்கள் தங்களது திறமையான படைப்புகள் மூலம் தன்னமபிக்கையை தருகிறார்கள்.
RAP சொல்லிசை கலைஞர் ஜேம்ஸ் ஜஸி தனது முதலாவது படைப்பின் மூலம் நல்ல விடயத்தை சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார்.
அவரது பிறந்தநாள் தினமான ஏப்ரல் 15 தினத்தன்று DREAM பாடலை இணையத்தில் வெளியிட்டார்.
பாடலில் ஒரு வாலிபன் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நன்றாக காட்டியுள்ளார்.
ஜீவானந்தன் ராமின் இசையில் ஜஸியின் வரிகளுக்கு ஸ்வர்ணஞ்சலி ,இந்துஜா ஸ்ரீ கந்தனின் குரல்களில் பாடல் வெளியாகியுள்ளது.
கூடவே ராகுல் ராஜ் ,தினேஷ் நா ,நிரோஷ் விஜய் ,க்ரிஷ் மனோஜ் மற்றும் கெவினின் உழைப்பில் அருமையான் DREAM பாடலுக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.