நேற்று Ezha Vaani யின் காப்பு நூல் வெளியீடு கொழும்பு தமிழ் சங்கத்தில் பல எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதில் குறிப்பாக சக்தி வானொலி பிரதானி அபர்ணா சுதன் பேச ஆரம்பித்ததும் அரங்கே அதிர்ந்தது.அவரது கம்பீரமான குரல் அனைவரையும் வியப்பில் ஆழத்தியது
நிறைய உரைகள் இடம்பெற்றபோதும் ஒரு சிலருடையது மிக ரசிக்கக் கூடியதாக சுருக்கமாக இருந்தது.
குறிப்பாக Janagan Vinayagamoorthy இவரின் பேச்சில் இன்றைய எழுத்தாளர்களின் எழுத்தை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பதை மிக தெளிவாக சுவாரசியமாக சொன்னார் .
அதே போல எழுத்தாளர் ஊடகவியலாளருமான Sathish Kumar Sivalingamஅவர்களின் உரை ஆழமானதாக இருந்தது.
அதே போல அறிவிப்பாளர் aparna sudan அவர்களின் சிறப்புரையும் முத்தாய்ப்பாய் செதுக்கியது போல அமைந்தது அவரின் குரலின் கம்பீரத்துடன் .
மிக நீண்ட நாட்களுக்கு பின் ஒரு நல்ல கவிதையாக மேடையில் கேட்டது இன்று Sharmila வின் எழுச்சி மிக்க கவிதை வரிகள் அபாரம். நிகழ்வு மிக சிறப்பாக Bishrin இன் நிகழ்ச்சி தொகுப்பில் இனிதே நடந்தது.