அபர்ணா ,கணா ,இர்பான் ,முஷரப் ஆகியோருக்கு ஜனாதிபதி விருதுகள் – வாழ்த்துக்கள்

2018 ஆம் ஆண்டு ஐனாதிபதி ஊடக விருதுகள் இன்று BMICH இல் வைத்து வழங்கப்பட்டது.

இராஜாங்க பாதுகாப்பு மற்றும் ஊடக துறை அமைச்சர் ருவன் விஜயவர்தனவின் தலைமையில் இந்த விழா நடந்தது.

இதில் இலங்கையில் இருந்து ஒளி /ஒலிபரப்படும் வானொலி மற்றும் தொலைக்காட்சி பத்திரிகை துறையினரின் திறமைகளுக்கு வழங்கப்பட்டது.

இதில் தமிழ் வானொலிகளில் சிறந்த நிகழ்ச்சிக்கான விருதை
R.P.அபர்ணாசுதன் (ஆதியோகி) மற்றும்
சிறந்த ஆய்வு நிகழ்ச்சிக்காக – G. கணாதிபன் அண்ணா (வணக்கம் தாயகம்) ஆகியோர் பெற்றனர்.

சிறந்த தொலைக்காட்சி ஆய்வு நிகழ்ச்சிக்காக வசந்தம் டிவியின் இர்பான் மொகமட் மற்றும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை மொஹமட் முஷரப் ஆகியோரும் பெற்றனர் .

விருது பெற்ற அனைவருக்கும் www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!