“அக்ஷரா” இசைக்குழுவினர்களின் அசத்தல் இசையில் “வசந்த கானங்கள்” இசைநிகழ்ச்சி நேற்று (07.04.2019) ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற போது மனது மறக்காத இடைக்கால பழைய பாடல்களோடு, கண்ணகி கலாலயம் கலைஞர்களின் நகைச்சுவை நாடகமும் கொழும்பு .13 விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெற்றது.
எமது நாடகம் அரங்கேற நண்பர் Kai Kave Kamal தனது பூரண ஒத்துழைப்பை வழங்கியதோடு தலை நகரில் மீண்டும் மேடை நாடகங்கள் மறு மலர்ச்சி பெற வேண்டும் என பரந்த எண்ணத்துத்துடன் செயற்பட்டார். அத்தோடு N.M. Kala Ayathanayakala நண்பர் m.m. நாசாரின் நடனமும் நிகழ்வை அலங்கரித்திருந்தது.
எமது நாடக நிகழ்வு சிறப்பாக இடம் பெற மூலக்காரணமாக இருந்தவர் எமது நாட்டின் பிரபல கலைஞர் கலாப்பூசணம் M.k.சுதாகர், பிரபல நடிகை அமுதவள்ளி, எமது மன்றத்தின் பொருளாளர் M.F.M நாசர், இவர்களோடு எமது மன்ற செயற்குழு உறுப்பினர்கள் கவிநாத், மணி ஆகியோருக்கு எமது விஷேட நன்றிகள்.
நிகழ்வை எமது மன்ற செயலாளரும் வளர்ந்து வரும் திறமை மிகுந்த அறிவிப்பாளருமாகிய சகோதரன் R.S. Ketheeshwaran தொகுத்து வழங்கி இருந்தார்.
சிறப்பான பாடல்களும் அனுபவம் வாய்ந்த இசையும் தேன் சொட்டும் குரல்களும் நிகழ்வை அலங்கரித்திருந்தன…
இது முடிவல்ல
இன்னொரு படைப்பின் ஆரம்பம்..
நாம் என்றும் உங்களுடன்..