ராதேயன் தனது இயக்கத்தில் மிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் நூதனன்.
கிட்டத்தட்ட மட்டகளப்பில் மட்டும் 175 க்கு மேற்பட்ட கலைஞர்கள் தங்களது பங்களிப்பை நூதனன் படத்திற்கு வழங்கியுள்ளனர்.
இப்படம் தொடர்பாக மக்கள் கருத்து….விரைவில் நாம் அதை தொகுத்து தரவுள்ளோம்.இலங்கை தமிழ் சினிமாவை வளர்த்து வாழவைக்க பலர் இருக்கிறார்கள்.ஆனால்
ராதேயன் போன்ற படைப்பாளிகளை உற்சாகபடுத்தி ,பாராட்ட நாம் மட்டுமே உள்ளோம்.
நூதனன் முன்னோட்ட முகவரி தாங்கிய மூன்றாம் பார்வை தயார் நிலையில் இருக்க, நூதனனில் கனிந்த பக்கங்களில் பல …. ஒவ்வொன்றும் பல கதைகள் கூறிப்போகும்
முப்பரிமானமாய் பல நூதன கவிதைகள் அதில் சில வரிகள் இங்கே, “கலியுகத்தில் கடவுள் கண்களை மூடிக்கொள்ள காலன்களின் ஆட்டமும் ஒரு காதலும் இங்கு காட்சிக்கு”, தவிர்த்து இன்னும் மூன்று கதைகளும் காத்திருக்கு
நூதனன் படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.