நவகம்புர கணேஷ், மற்றும் தேவாவின் நினைவாக கவிக்கமலின் அக்ஷரா இசைக்கலைஞர்கள் வழங்கும் “இதய ராகங்கள்”

எமது மண்ணை விட்டு மறைந்த புகழ் பெற்ற பாடகரும் நடன கலைஞருமான நவகம்புர கணேஷ், மற்றும் நம்மை விட்டு மறைந்த புகழ் பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசை தென்றல் தேவாவின் நினைவாக கவிக்கமலின் அக்ஷரா இசைக்கலைஞர்கள் வழங்கும் “இதய ராகங்கள்” (இசையால் பேச வருகிறோம்). இசை நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிறு மாலை 6 மணிக்கு கொழும்பு ஜிந்துபிட்டி நீதிராஜ சபை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

தேவா இசையமைத்த பாடல்களின் இந்த இசைச் சங்கமத்தில் பாடக பாடகிகளான கவிக்கமல், பிரைட் வின்சன், உமா, சான், தவசீலன், மொஹமட் ரிப்கான், சிவா, துர்கா, நாகராசா தேவாராசா ஆகியோர் பாடவிருக்கின்றனர்.

இந்நிகழ்விற்கு கிரிக்கெட் பயிற்சிவிப்பாளர் J.M.M ரிஸ்வான் தலைமை தாங்கவுள்ளார். பிரதம அதிதியாக டாக்டர் உதயசங்கர் நாயுடும் , முன்னிலை அதிதியாக வீரகேசரி பத்திரிகையின் நிறைவேற்று அதிகாரி எம் செந்தில்நாதனும் கலந்து கொள்கின்றனர்.

கௌரவ அதிதிகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜீ யோகராஜன் பிள்ளை, கொழும்பு நகர சபை உறுப்பினர் எஸ் ஆனந்தகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம் நிசாம்தீன், மக்கள் நல சம்மேளனத்தின் தவிசாளர் ஜனாப் அஸீஸ் லக்ஹானா, தொழிலதிபர், எஸ் எம் வாஜிட் அலி, NVK மெட்டல் உரிமையாளர் வினோத் குமார் (பாபு), வீ கிருஷ்ணா, உமாகாந்தன் ஆகியோரும்,

சிறப்பதிதிகளாக கலைஞர் ராதா மேத்தா, முன்னாள் நகரசபை உறுப்பினர் ஏ ஜோசப் பெர்ணான்டோ, கலாவிபூசணம் இரா தில்லைராஜன், கலைஞர் மணிராஜ், கலைஞர் திரு பொன்பத்மநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் கே. ஈஸ்வரலிங்கம், கவிஞர் ஈழ கணேஷ், Touch and Touch உரிமையாளர் நவராஜா சேதுராஜா, ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன், மற்றும் வகவத் தலைவர் கவிமணி நஜ்முல் ஹுசைன் ஆகியோர் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்.

இங்கு 100 பேருக்கு பாடசாலை புத்தகங்கள் வழங்கவும் கலைஞர்கள் 25 பேருக்கு சான்றிதழ்கள் வழங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அனுமதி முற்றிலும் இலவசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!