கண்ணகி கலாலயம் , ஏ.கே. இளங்கோ இந்த இரண்டு பெயர்களும் இந்த உலகில் கலை இருக்கும் வரை இருக்கும்.

ஏ.கே. இளங்கோ கலை தாயின் செல்ல மகன் அவரது நடிப்பு , கலை மீது அவர் காட்டும் ஆர்வம் அவ்வளவு உண்மையானது.
புதிய செய்தி தான் கண்ணகி கலாலயம் பெருமையுடன் வழங்கும் ஏ.கே. இளங்கோவின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் ஒரு படைப்பு வெளிவரப்போகிறது
“வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என்ற மருந்துடன் முற்று முழுதாக நகைச்சுவை விருந்து.

இக்காலத்திற்கு தேவையான ஒரு விடயம் . மக்கள் பெரும் மன அழுத்தத்தில் இருக்கும் போது இப்படி ஒரு படைப்பு தேவை .
படத்தின் பெயர் “சகலகலா கில்லாடிகள்” . பெயரை கேட்டவுடன் படம் முழுக்க முழுக்க சிரிப்பு தான் .
“சகலகலா கில்லாடிகள்” திரைப்படம் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்ப பூஜையுடன் சிறப்பாக படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆடல், பாடல், நகைச்சுவை என விரைவில் வெள்ளித் திரையில் பல சுவாரஷ்யங்களை ஏ.கே. இளங்கோ கொண்டு வருவார் என்பதில் சந்தேகமில்லை.
தயாரிப்பாளர்கள் தயங்கும் நிலையில் எனது திறனை நம்பி வந்தவர்களுக்கு நன்றிகள் என தனது முகப்புத்தகத்தில் ஏ.கே. இளங்கோ பதிவிட்டுள்ளார்.
ஏ.கே. இளங்கோ மற்றும் படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.