இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் சேவையின் உதவிப் பணிப்பாளராக நாகபூஷணி கருப்பையா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சி தருகிறது.
இலங்கை வானொலியி்ல் நீண்ட காலமாக சேவையாற்றி வருகிறார்.
அவரது சேவைமூப்பு அனுபவம், திறமை, கல்வித் தகைமை இவைகளே அவரை உயர் அந்தஸ்தில் இன்று வைத்துள்ளன.
நாகபூஷணி கருப்பையா கம்பளையில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை கருப்பையா தேசிகர்; தாய் காளியம்மாள். இவர் தற்பொழுது இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக கடமையாற்றி வருகிறார்.
தனது 18ஆவது வயதில் எழுத்துத்துறைக்கு பிரவேசித்தார். நாவலப்பிட்டி கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம் வரை கல்வி கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கமைாணி பட்டம் பெற்றுள்ளார்.
அத்தோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்றுள்ளார். இவர் அறிவிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர்.செய்தி வாசிப்பாளர். விரிவுரையாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். “நெற்றிக்கண்” கவிதை நூலின் நூலாசிரியருமாவார்.
இவரின் ஊடகத்துறையை ஆளுமைக்காக சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருது,
மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலய விருது போன்றன விருதுகளை பெற்றுள்ளார்.
அத்தோடு மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிவிப்பாளர் சிறந்த செய்திவாசிப்பாளர் என்ற இரட்டை அரச வானொலி விருதுகளையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாகபூஷணி கருப்பையா மென் மேலும் உயர்ந்திட இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.