சுய சக்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின விழா

சுய சக்தி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த 2025 ஆம் ஆண்டு மகளிர் தின விழா கொட்டகல ஸ்டோனிகிளிப் தமிழ் வித்தியாலய பாடசாலை மைதானத்தில் 08/03/2025 நேற்று இடம் பெற்றது.

நூற்றுக்கணக்கான பிரதேசத்தின் பெண்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பெண்கள் உரிமை சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

தோட்ட நிர்வாகத்தின் முழுமையான ஆதரவோடு இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான சிவில் அமைப்புகளினுடைய பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சுய சக்தி நிறுவனத்தின் உடைய நிருவுனர்.
திரு,A செல்வராஜ் அவர்கள் பெண்கள் உரிமை சார்ந்த பல விடயங்களை அவரது உரையில் தெரிவித்திருந்தார்.

சுயசக்தி நிறுவனத்தினுடைய
கள உத்தியோகஸ்தர் செல்வி. S.அஷ்வினி நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

சுயசக்தி நிறுவனத்தினுடைய அழைப்பை ஏற்று மலையக மக்கள் மன்றத்தின் சார்பாக அதனுடைய
ஸ்தாபகர்/செயலாளர் K.ரவீந்திரன் மற்றும் செல்வி.ராபீனா,
செல்வி, அபிலாஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சுயசக்தி நிறுவனம் தன்னுடைய மனம் நிறைவான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!