ஓசை புரொடக்சன் தயாரிப்பில் சுகிர்தன் கிருஸ்துராஜா – ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் ‘கயல்‘ வின்சன்ட் நகுல் மற்றும் TJ பானு ஆகியோரின் முதன்மை நடிப்பில் தாயகத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் டைட்டில் வெளியீடு இன்று (05) யாழில் இடம்பெற்றது.

திரைப்பட, ஆவணப்பட இயக்குனர் சோமீதரன் இதனை வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் தென் இந்திய திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஸ், ‘ஆண்டவன் கட்டளை‘ திரைப்பட புகழ் அரவிந்தன் உள்ளிட்ட எம் சினிமா கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

‘அந்தோனி‘ திரைப்பட நடிகை TJ பானு, அண்மையில் ரவி மோகன் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை‘ திரைப்பட 2ஆம் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
