ஒரு படம் உருவாக எவ்வளவு பேர் உழைக்க வேண்டுமென்பது எல்லோருக்கும் தெரியும் .
ஆனால் நுவரெலியாவை சேர்ந்த இந்த மனுஷனுக்கு ஆண்டவன் புதுமையான திறமையை தந்துள்ளார்.
அவரது படத்திற்கு சகல வேலைகளையும் அவரே பார்த்துள்ளார்.
அவரிடமே அவரை பற்றி கேட்டோம்
திரைப்படத்தின் பெயர் : ரணம் இந்த திரைப்படத்தில் அனைத்து வேலைகளையும் நானே செய்தேன்.
நடித்தது இயக்கியது ஒலிப்பதிவு செய்தது மற்றும் எடிட்டிங் அனைத்தும் .ரணம் திரைப்படம் முழுக்க முழுக்க என்னுடைய திரைப்படமாகும்.
இந்தத் திரைப்படத்தை ஒரு தனி மனிதனாக நானே தயாரித்தேன் இந்த திரைப்படத்தினை என்னுடைய INFINITE PICTURES என்கின்ற youtube வளைத் தளத்தில் பதிவிட்டு இருக்கிறேன் .
https://www.youtube.com/@Infinite_77-o5b
என்னுடைய பெயர் சிவன் மூர்த்தி சித்து என்னுடைய வயது 28 ஆகும்.

என்னுடைய ஊர் நுவரெலியா . நான் கல்வி கற்ற பாடசாலையின் பெயர் பீட்ரூ தமிழ் வித்தியாலயம்.
நான் ஒரு போட்டோகிராபர் நான் என்னுடைய நண்பர்களான சதீஷ் மற்றும் திவான் இவர்களுடன் இணைந்து ஸ்டுடியோ ஒன்று செய்து கொண்டிருக்கிறேன்.

களைப்பணியில் நான் ஒரு ஐந்து வருடமாக இருக்கிறேன் பாடல்களை இசையமைத்து பாடி வெளியிட்டிருக்கிறேன்.
அதற்குப் பிறகு ஒரு திரைப்படம் நடித்திருந்தேன் அது ரீகல் சினிமாவில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது அதன் பிறகு இப்பொழுது ரணம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து இருக்கின்றேன்.

மென்மேலும் பல சாதனைகளை படைக்க இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.