இலங்கையின் தமிழ் சினிமாத்துறையிக்கு பல இயக்குநர்களால் புதுமைகள் சேர்க்கப்பட்டு வருகிறது.
கலைத்துறையின் மறுமலர்ச்சியின் இன்னுமொரு மைல் கல்தான் இளம் இயக்குனர் J.ரொபின் இயக்கத்தில் உருவான “எய்தாப்பழி”.
Ravana entertainment பெருமையுடன் வழங்கும் RKR production தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கெவின் ராகுல் கதாநாயகனாக நடித்துள்ளார் .
நம் நாட்டின் மிக சிறந்த நடிகர்களுள் ஒருவரான A.K.இளங்கோ முக்கியமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பில் அசத்தியுள்ளார்.
“எய்தாப்பழி” திரைப்படமானது இலங்கை கலைஞர்கள் அப்துல் ரியாஸ், தேவர் முனிவர், விஜி தர்ஷினி மற்றும் ரதன்ராஜ் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையே வேறமாதிரி காட்டியுள்ளனர்.
ஆர்.ஜே.ஜனா, மனீஷா சியாமலி, ஊரெழு பகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்துக்கான இசையை A.புஸ்பகாந்தன் வழங்கியுள்ளார் .
இவர்களோடு தமிழ் மற்றும் சிங்கள கலைஞர்களின் நடிப்பின் பங்களிப்புடன் விரைவில் வெளியாகவிருக்கும் “எய்தாப்பழி” சித்திரை புத்தாண்டில் வெளியாகவுள்ளது .
வள்ளுவனின் குரள் வாசித்து பொருள் தேட அகராதியை புரட்டி பார்க்க வைக்கும் அளவுக்கு இயக்குனர் திரைப்படத்துக்கு பெயர் சூட்டியுள்ளார் .
இந்த திரைப்படம் மூலம் ஒரு இளம் இயக்குநர் ஒருவர் ராமர் திவேக் எனும் இன்னுமொரு இளையவரை உதவி இயக்குனராக அறிமுகப்படுத்துகிற துணிவு என்பது பாராட்டத்தக்கது.
நாமும் காத்திருக்கிறோம் திரையில் இப்படைப்பை காண. படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள் ..