எம் பி ஹீரோஸ் PICTURES திரைப்பட தயாரிப்பு நிறுவனம் என்பது சிறந்த படைப்புக்களை வழங்கி வரும் நிறுவனம்.
இவர்கள் இந்த வருடத்தில் வெளியிடவுள்ள முதலாவது படைப்பு “யாதவின் அன்பின் பாதை”
இப் குறும்படத்தின் முதற்பார்வையை அவர்களது வலைத்தளப்பக்கத்தில் இம்மாதம் 18 ஆம் திகதி வெளியிட்டு வைத்தனர்.
மாற்றுத்திறனாளிகளின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பெரிதும் பேசப்படும் படமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
‘ஒற்றைச்சிறகு’ படம் நீங்கள் அனைவரும் அறிந்த ஒரு சிறந்த படைப்பு.
‘ஒற்றைச்சிறகு’ திரைப்பட இயக்குனர் ஜனா மோகேந்திரனின் எண்ணம் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இதில், ஒளிப்பதிவு RJ NELU மேற்கொள்ள KISHANTH KERTHSEELAN (SCREEN ENTERTAINMENT) இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பை VIJIKUMAR SELAVARADNAMமும் ஒலிக்கலவையை DANIYAL SIMIYON(WEGENTS STUDIO கச்சிதமாக செய்துள்ளனர்.
நடிகர்களாக: கதையின் நாயகனாக குஜேந்தன் மற்றும் நடிகர்களாக கிருபா, தவமுரளி, திலக், நந்தன், சதீஷ்(சீனன்வெளி), மதுசிகா, நிரோசாந்த், தவராஜா, வினித்தா, விஜித்தா, இளங்கோ, ஸ்டெல்லா மற்றும் வெருகல் மாவடிச்சேனை அறநெறி மாணவர்களும் பணியாற்றியுள்ளனர்.
திரைப்படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.