தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் உச்ச புகழை அடைந்தவர் நமது இளங்கோ ராம்.
நம் மார்தட்டி சொல்ல கூடிய ஒரு அதிசய இயக்குனர் என்று தான் சொல்ல வேண்டும்
சிங்கள கலையுலகில் எத்தனையோ பிரமாண்ட இயக்குனர்கள் இருந்த போதும் இளங்கோ ராம் என்ற நமது பெருமை மிகு இயக்குனரை தேடி வருகிறார்கள்.
தற்போது தென்னிந்திய திரைப்படத்தை இயக்குகிறார் இளங்கோ ராம்
இளங்கோ ராம் இயக்கத்தில் எதிர்பார்க்கப்படும் தமிழ் கோமெடி திரைப்படம் தான் பெருசு.
இது சிரிப்புடனான கதையுடன் பார்வையாளர்களை கவரும். இந்த திரைப்படத்தில் வைபவ் ரெட்டி மற்றும் சுனில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அவர்களின் கோமெடி நேரம் ஒட்டுமொத்தமாக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
அருண் ராஜ் இசை அமைத்துள்ள இந்த படத்தில், இசையும் சிறந்த அனுபவத்தை உறுதி செய்கிறது.
ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ் படக்குழுவின் கீழ் தயாரிக்கப்பட்ட பெருசு, அந்த நகைச்சுவை மற்றும் கவர்ச்சியுடன் நிச்சயமாக மக்களை கவரும்.
இந்த நேரத்தில் நாமும் இளங்கோ ராம் உட்பட படக்குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்