விஜய லோஷன்,கொழும்பில் இருந்து சென்னை சென்று சீ தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் பாடி புகழ்பெறவர்.
அதற்கு முதல் ஹிரு ஸ்டார் நிகழ்ச்சியில் பாடி பிரபலம் ஆனார் .
ஒரு தமிழ் பாடகர் சிங்கள மொழி தொலைக்காட்சியில் தமிழ் பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் புகழ் பெறுவது சாதாரண விடயமல்ல.
விஜய் லோஷன் பாடிய சில காணொளி பாடல்கள் YOUTUBE
இல் அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
அன்மையில் ஒரு YOUTUBE வலைத்தளத்திற்கு நேர்காணல் ஒன்றை விஜய் லோஷன் வழங்கி இருந்தார் .
இலங்கையில் திறமையான பாடகர்கள் , நடிகர்கள் , நடன கலைஞர்கள் பலர் இருக்கிறார்கள் , ஆனால் அவர்களுக்கு சரியான வாய்ப்பு இல்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் .
உண்மை தான் வானொலிகள் , தொலைக்காட்சிகள் என பல இருந்தாலும் அதில் நமது கலைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை .
இதே நேரம் எவர்க்ரீன் பிகர் பாடல் பற்றியும் கூறி இருந்தார். இதுவரை தான் கேட்காத ஒரு இசை அந்த பாடலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
எது எப்படியோ அவரது எவர்க்ரீன் பிகர் பாடலும் அவரது இசை வாழவும் சிறப்பாக அமைய இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்