ஹட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மலையக மக்கள் மன்றம் ஆரம்பித்து குறுகிய காலத்தில் பல மக்கள் மற்றும் கல்விக்கு தேவையான பல விடயங்களை முன்னெடுத்து வருகிறது.
கொழும்பு கர்ணா அறக்கட்டளை அமைப்புடன் இணைந்து நடாத்தும் பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான மாபெரும் கலை விழா -2025 ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.
நுவெரெலியா மாவட்டத்தின் மஸ்கேலியா லக்சபான பிரதேசத்தின் 08 பாலர் பாடசாலையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்களுக்கான கலை விழாவானது மிக பயனுள்ள ஒரு நிகழ்வாகும்.
எதிர்வரும் 2025 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாழமலை கரப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற உள்ளது.
சிறார்களின் கலை நிகழ்ச்சிகள், கௌரவிப்புக்கள், பரிசளிப்பு நிகழ்வுகள் என பல்வேறுபட்ட சுவாரஸ்யமான விடயங்கள் அரங்கேற காத்திருக்கின்றன.
இந்த நிகழ்வானது மலையக மக்கள் மன்றம் நடாத்தும் 2025 ஆம் ஆண்டின் மாபெரும் நிகழ்வாகும்.
எனவே லக்சபான பிரதேசத்தின் அத்தனை நல் உள்ளங்களையும் அன்போடு அழைக்கிறது மலையக மக்கள் மன்றம் . மற்றும் கர்ணா அறக்கட்டளை அமைப்பு.
பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக நலன் விரும்பிகள், தோட்ட முகாமைத்துவம் மற்றும் இளைஞர் அமைப்புகள் சார்பில்
மலையக மக்கள் மன்றம் செயலாளர் கே.ரவீந்திரன் அனைவரையும் அழைக்கிறார்.
பாலர் பாடசாலை சிறுவர்களுக்கான மாபெரும் கலை விழா வெற்றி பெற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்