மலையகம் தேவா என்ற ஒரு பெயர் இன்று பல இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் பேசபப்டுகிறது.
நிகழ்ச்சி தொகுப்பில் அசத்தும் தேவா ஒரு நல்ல நடிகர் என்பதை DEAR FIANCE படத்தில் மூலம் நிரூபித்துள்ளார் .
நல்ல பல திறமைகளை கொண்ட தேவா DEAR FIANCE படத்தில் நடித்ததை பற்றி மனம் திறந்து பேசுகிறார்என் வாழ்வில் கிடைத்த மற்றுமொரு வெற்றிகரமான ஒரு சந்தர்ப்பம் இதனை நான் சரியாக செய்திருக்கின்றேன் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவு உங்களுக்காக உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
பாடசாலை காலத்திலிருந்து ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் சமுதாயத்திற்கு ஒரு நல்ல செயல் திட்டங்களை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு என் பணிகள் ஆரம்பமாகியது அப்படி செல்லும் பொழுது தான் ஊடகத்துறை என்ற ஒன்றை நான் எவ்வளவு நேசிக்க முடியுமோ அவ்வளவு நேசித்தேன்.
அந்த பாதையிலும் இப்பொழுது பயணித்துக் கொண்டிருக்கின்றேன் இப்படி என் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்ற தருணம் மற்றும் ஒரு சிறப்பம்சமாக ஒரு குறுந் திரைப்படத்தின் ஊடாக நடிப்பதற்கான சந்தர்ப்பம் என்னை தேடி வந்தது.
சந்தர்ப்பம் வந்த பொழுது அந்தத் திரைப்படத்தில் அவர்களோடு சேர்ந்து கடமை ஆற்றுவதற்கான நேரம் மிக குறைவாக என்னிடம் இருந்தது இருந்தும் அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு நன்றி என்னுடைய நேரத்தை ஒதுக்கி இந்த திரைப்படத்தில் என்னுடைய திறமையும் கொண்டு வந்திருக்கின்றேன்.
தம்பி லோஷன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என் மீது அளவு கடந்த நம்பிக்கை இத்திரைப்படத்தில் உள்வாங்குவதற்கு என்னை மீண்டும் ஒரு முறை லோஷன் அவர்களுக்கு என் மனதார நன்றிகள்.
தம்பி உன் பயணம் இன்னும் அதிகமாக செல்ல வேண்டும் உன் ஆர்வம் மிக்க இந்த பயணமும் வெற்றியடைய வேண்டும் மற்றும் எங்களுடைய படத்தின் இயக்குனர் அவர்களுக்கும் மற்றும் இந்த படத்தில் கடமையாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இருந்தபோதும் இத்திரைப்படத்தில் கொண்டு வந்திருக்கின்ற கருத்து எமது சமுதாயத்துக்கு ஒரு நல்ல விடயத்தை கொண்டு செல்லும் என்பதில் ஒரு மிகப்பெரும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது .
எனவே உங்களின் பெரும் ஆதரவை எங்களுக்கு தந்த உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன் ஏதும் பிழை குறைகள் இருப்பின் கட்டாயமாக படத்தைப் பார்த்து நீங்கள் உங்கள் அன்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நாங்கள் செல்லும் இந்த பாதை இன்னும் வெற்றிகரமாக செல்வதற்கு உகந்த சக்தியாக அமையும் வருகின்ற 22 ஆம் தேதி திரைப்படம் வெளியிடப்படுகின்றது youtube தளத்தின் ஊடாக (YouTube @LK Entertainment DEAR FIANCE )திரைப்படமானது அன்பை பற்றி அதிகமாக வெளிக்கொண்டு வந்திருக்கின்ற ஒரு திரைப்படமாக உங்கள் அனைவருக்கும் அமைய காத்திருக்கின்றது.
தேவா நடித்திருக்கும் DEAR FIANCE பேசப்படும் கதையாக வெற்றிபெற இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்…..