சமில் என்றாலே நமக்கு விருதுகள் தான் நினைவுக்கு வரும் .இலங்கையின் மிக முக்கியமான இசை விருதுகளை பெற்றவர் .
ஏராளமான படங்கள் மற்றும் பாடல்கள் ,வானொலி குறி இசைகள் என சமீலின் சாதனையை அடிக்கி கொண்டே போகலாம் .
தற்போது சமில் தென்னிந்திய சினிமா துறையில் காலடி எடுத்து வைக்கும் முதலாவது படம் இஷாக் இயக்கம் ஜெஸி.
இப்படத்தில் சமில் பணியாற்றுவது தொடர்பாக அவரது முகப்புத்த்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
கின்னஸ் நாயகன், ” நாகேஷ் திரையரங்கம்” திரைப்பட இயக்குனர் Mohamad Issack அவர்களின் மற்றுமொரு படைப்பான ” ஜெஸி ” திரைப்பட பாடலுடன் எனது தென்னிந்திய சினிமா பயணம் ஆரம்பமாவது சற்றும் எதிர்பாராத , வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத விடயமே. இன்னுமொரு தளத்தில் , திறமைகளுக்கு மதிப்பளித்து எனக்கு வாய்ப்பளித்த Mohamad Issackஅவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அத்தோடு எனது இந்த பயணம் உங்களை பெருமைப்படுத்தும் விதமாகவே அமையும் என்பதையும் இந்த இடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
என் முயற்சிகளுக்கு என்னை விடவும் அக்கறை செலுத்தும் உடன்பிறவா சகோதரர் Vel M அவர்களுக்கு நன்றிகள். இந்த படைப்பில் பங்களிப்பு வழங்கிய மனைவி Shazna Shameel மற்றும் Isy VelScanowa Fernando HarziSelva MugunthanPuvanesh Nagenthiran RajDeyo DeluxshionSri Shankerஅனைவருக்கும் நன்றிகள். வெகுவிரைவில் படைப்பு மூலமாகவே பேசுகிறேன். 😍💪
எல்லா புகழும் இறைவனுக்கே …
சமீலின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்று தென்னிந்திய சினிமாவில் சாதிக்க www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் வாழ்த்துக்கள்.