படத்தில் இருப்பவரை பற்றி தான் உலகமே பேசுகிறது.
உலக தமிழர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பெயர் கவிப்ரியா
நான் இலங்கையில் இருந்து வந்துள்ளேன் என்றவுடன் அனுதாப வாக்கு இவருக்கு தேவையில்லை
இவரது நடிப்பை பார்த்து ஏனைய போட்டியாளர்கள் அசந்து போயுள்ளார்கள் .
இலங்கையில் நாம் நல்ல திறமையானவர்களை வாய்ப்பு கொடுப்பதில்லை . கொடுத்தால் நம்மள மிஞ்சுருவாங்க என்ற பயம் .
இதே தென்னிந்திய தொலைக்காட்சியில் சாதித்த பிறகு ….. நாங்க தான் இவரை முதலில் கெளரவிக்கிறோம் என்று பீத்திக்கொள்வது ….
சரி அதை விடுவோம்.. அப்படி என்ன தான் கவிப்பிரியாவின் நடிப்பில் உள்ளது ? என்றால் அவரின் யதார்த்த நடிப்பு தான் ….
கதாபாத்திரத்தில் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணே அப்படியே வந்து தோன்றுவதுபோல் அவர் நடிப்பு
இன்னும் அவர் பல சாதனைகளை படைக்க வேண்டும்
விரைவில் சின்னத்திரை தொடரில் கதாநாயகியாக கூட வந்தால் ஆசிரியப்படுவதற்கு இல்லை
கவிப்பிரியா இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்…