2024 ஆம் ஆண்டுக்கான சாஹித்ய ரத்னா விருது பெறும் சிரேஸ்ட ஊடகவியலாளர் எழுத்தாளர் அன்னலக்ஷ்மி
இராஜதுரை அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
அதியுயர் விருதான சாஹித்ய ரத்னா விருது தொடர்ச்சியாக ஆண்கள் தரப்புக்கு மாத்திரம் வழங்கி வந்துள்ள நிலையில், இது பற்றி தொடர்ச்சியாக தமிழன் – தமிழ்முரசு கலை இலக்கிய இதழில் எழுத்தாளர் ஜீவா சதாசிவம் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதே நேரம் ஆசிரியர் தலையங்கத்தின் ஊடாக பலமுறை சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது தொடர்பாக மூத்த ஒலிபரப்பாளர் VN மதியழகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்
மூத்த ஊடகவியலாளரும் புகழ் பூத்த எழுத்தாளருமான அன்னலட்சுமி இராஜதுரை அவர்களுக்கு “சாஹித்யரத்னா” விருது வழங்கப்பட்ட
செய்தியை
அவரின் அடுத்த தலைமுறை ஊடகரான ஜீவா சதாசிவம் அவர்கள்
எமக்கெல்லாம் முகநூல் வாயிலாக அறிவித்துள்ளார்.
நன்றி ஜீவா நல்ல செய்தி தந்தீர்கள்.
அன்னலட்சுமி ராஜதுரை அவர்களே!
இலங்கை வானொலி தமிழ் சேவைக்கு
வீரகேசரியில் தாங்கள் பணியாற்றிய காலத்திலிருந்து
அளித்து வந்த பங்களிப்பை மனதில் நிறுத்தி
பெரும் உவப்போடு வாழ்த்து தந்திடுகிறேன்.
இந்த வேளையில் நாமும் 2024 ஆம் ஆண்டுக்கான சாஹித்ய ரத்னா விருது பெறும் சிரேஸ்ட ஊடகவியலாளர் எழுத்தாளர் அன்னலக்ஷ்மி ராஜதுரை அவர்களை வாழ்த்துகிறோம்