கொழும்பு மாவட்டத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடந்த 2005 2015 2020 ஆண்டு காலாங்கில் பாராளுமன்றத்தில் இருந்தவர் .
2015 ஆம் ஆண்டு மனோ கணேசனுடன் யானை சின்னத்தில் சண் குகவரதன் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார்.
2020 ஆம் ஆண்டு மனோ கணேசனுடன் டெலிபோன் சின்னத்தில் ஜனகன் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார்.
ஆனால் இந்த இரு தேர்தல்களிலும் தமிழ் மக்கள் சரியாக தங்கள் வாக்கை பயன் படுத்தவில்லை.
இப்போது 2024 தேர்தலில் ARV லோஷன் மனோ கணேசனுடன் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
சரி இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமையை இனி பார்க்கலாம்.
2015 ஆம் ஆண்டு மனோ கணேசனுடன் யானை சின்னத்தில் போட்டியிட்ட சண் குகவரதன் வெற்றி டிவி யின் பங்குதாரராக இருந்தவர் .
2020 ஆம் ஆண்டு மனோ கணேசனுடன் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்ட ஜனகனும் வெற்றி TV யின் பங்குதாரராக இருந்தவர் .
2024 தேர்தலில் போட்டியிட போகும் ARV லோஷன் வெற்றி FM இன் பணிப்பாளராக இருந்தவர்
மனோ கணேசனுடன் டெலிபோன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
ஆக மொத்தம் வெற்றி கூட்டணியில் இருந்த மூவரும் அரசியலில் கால் பதித்துள்ளனர்.
லோஷனின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்குமா?
பொறுத்திருந்து பார்ப்போம்.