Zee தமிழின் மகா நடிகை நிகழ்ச்சி நேற்று ஆரம்பமான நிலையில் இலங்கை கவிப்பிரியா அனைத்து நடுவர்கள் மட்டும் ஜூரியின் பாராட்டயை பெற்றார்.
இந்த பாராட்டு சாதாரண பாரட்டல்ல. ஒட்டு மொத்த zee Tamil ரசிகர்களும் கண்ணீரில் தத்தளித்த தருணம்.
கவிப்பிரியாவின் நடிப்பு சாதரணமான நடிப்பல்ல . ஒரு தேர்ச்சி பெற்ற நடிகை எவ்வாறு நவசரங்களையும் வெளிப்படுத்துவார் … அப்படி வெளிப்படுத்தினார் .
கொல்கத்தா பெண் வைத்தியர் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் நம் இதயங்களை விட்டு விலகாத நிலையில் கவியப்பிரியாவின் இந்த Concept உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது .
கவிப்பிரியாவின் இந்த திறமைக்கு இயக்குனர் லிங்குசாமி
எழுந்து நின்று பாராட்டினார்.
“நீங்க இலங்கை பெண்களுக்கு பெருமை சேர்த்துட்டீங்கனு “ லிங்குசாமி சொன்னது இலங்கை பெண்களுக்கு உண்மையில் பெருமை தான் .
வாழ்த்துக்கள் கவிப்பிரியா …. உங்கள் முன்னேற்றமே எமது வெற்றி ….
இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.