சமூக சேவையாளர் சட்ச்சிதானந்தன் பழனிசாமி தனது முகப்புத்த்க பக்கத்தில் சக்திக்கு தொலைகாட்சி செய்தி பெண் வாசிப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் இதோ..
சக்திக்கு ஒரு தயவான வேண்டுகோள்!
தமிழே உயிரான சக்தி–
சக்தி மிக்க சக்தி–
தமிழ் விழுமியம்–
நாகரீகத்தை…
உயிர் மூச்சாகக் கொண்ட..
சக்தி தொலைக்காட்சியே!
உங்களது இந்த இரண்டு அறிவிப்பாளினி மகள்மாருமே…
தமிழர் பாரம்பரிய முறைப்படி கைதூக்கி வணக்கம் செலுத்த முடியாத ஏதோவொரு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார்களோ? என்று.. நம் சக்தியின் அபிமான தமிழ் மக்கள் மிகுந்த கவலையடைகிறார்கள்!
இந்த பரிதாப நிலையில்…
இந்த இரண்டு அழகிய தமிழ் அறிவிப்பாளர்களது கைகள் இயங்க ஏற்ற மருத்துவ சிகிச்சைக்கு சக்தி உதவினால் என்ன?
பாதிக்கப்பட்ட எத்தனையோ பேருக்கு செய்யும் உதவியை… பாவம்,உங்கள் அறிவிப்பாளர்களுக்கு முதலில் நீங்கள் செய்யக்கூடாதா?
தனக்கு மிஞ்சிதானே தானம்!
அதுவும் பெண்ணென்றால் பேயும் இரங்கும், எனும்போது
சக்தி இப்படி இவர்களைக் கைவிடுவது நல்லதா?
இப்படி ஒரு பதிவை சட்சிதானந்தன் அவர்கள் எழுத காரணமானது தமிழ் மீதுள்ள பற்று தான் .இதில் தவறு இருப்பதாக நாம் நினைக்கவில்லை .நன்றி